பக்கம்:மணிவாசகர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலஞ் சென்ற தமிழறிஞர் மறைமலையடிகளும் திரு வாசகத்தில் வரும் குறிப்புக்கள் அனைத்தையும் தொகுத்து ஆராய்ந்த பிறகு திருவாதவூரர் திருமணஞ் செய்து கொண்டு வாழ்ந்தவரே என்ற முடிபுக்கு வந்து அவ்வாறே எழுதினார். பிற்காலத்தில் நம் நாட்டில் போலித் துறவும் அத்வைதக் கொள்கையும் மிகுதியும் புகுந்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டவர்கள் வீடுபேற்றை அடைய முடியாது என்ற தவறான எண்ணம் புகுந்தது. அதன் பயனாகவே பெரியோர்களை யெல்லாம் மணமாகாதவர் கள் என்று கூறத் தொடங்கினர் என்றும் நினைக்க வேண்டியுளது. அனுபவத்தால் நிறைந்து முழுத் தன்மை பெற்று வாழ்ந்த பெரியோர்களின் வாழ்க்கையை எடுத்துப் பார்த் தால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் ஏதோ ஒரு சொல்லாலேயோ அல்லது ஒரு சிறு நிகழ்ச்சி யினாலேயோ நிகழ்ந்திருக்கக் காணலாம். மோகன்தாஸ் கரம்சந் காந்தி என்ற குஜராத்திப் பெரியார் மகாத்மா காந்தி என்ற உலக மானுடன் (World Citizen) ஆவதற்கு அவர் பார்த்த அரிச்சந்திர நாடகம் துணை செய்தது. சதாசிவப் பிரமேந்திரர் அவ்வாறு ஆவதற்கு அவருடைய தாய் கூறிய ஒரிரண்டு சொற்கள் காரணமாயின. நரேந் திரன் என்ற கல்விக் கடல் விவேகாநந்தர் என்ற ஞானி யாவதற்குத் ததாகதர் என்ற குருவின் ஒரு சொல் காரண மாயிற்று. திருவாதவூரர் என்ற பாண்டி நாட்டு அமைச்சர் மணிவாசகராக ஆவதற்குக் குருந்த மரத்தடியிலிருந்த ஆசிரியனின் ஒரு சொல் காரணமாயிற்று. இவர்கள் இத் துணைப் பேரும் இப் பிறிவியிலேயோ முற் பிறவிகளிலோ முழு அனுபவத்தையும் பெற்றுத் தயாராக இருந்தமையின் ஒரு சொல் அல்லது நிகழ்ச்சி அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மடைமாற்றம் நிகழக் காரணமாய் இருந்தது. திருப்பெருந்துறையில் இருந்த குருவைத் திருவாத ஆரர் மட்டுமா கண்டிருப்பார்? அவருடன் சென்ற நூற் 240

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/241&oldid=852692" இலிருந்து மீள்விக்கப்பட்டது