பக்கம்:மணிவாசகர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்று திருவாதவூரர் இதற்கு வடிவு கொடுத்தார். எனவே அது கலைச்செல்வத்தை மிகுதியும் பெற்றுத் திகழ்கின்றது. இக்கோவை பாடிய பிறகு திருவாதவூரர் அரசனிடம் தலைமை அமைச்சர் என்ற மரியாதையுடன் பெரும் புலவர், பெரிய பக்தர் என்ற மரியாதையையும் சேர்த்துப் பெற்றிருத்தல் வேண்டும். இதன் பின்னர் அவர் குதிரை வாங்கப் புறப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றிருத்தல் வேண்டும். இதிலும் ஒரு புதுமை உளது. ஒரு பெரிய அரசின் தலைமை அமைச் சருக்கு எத்துணையோ பணிகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அப் பணிகளுள் நல்ல குதிரை களைப் பார்த்து வாங்கச் செய்வதும் ஒன்றாக இருக்க லாம் வாங்குமாறு கட்டளையிடுவது ஒரு பணியாக இருக் கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதாவது ஏவுதற் கர்த்தாவாக ஒர் அமைச்சர் இருக்க முடியுமே தவிர, 'இயற்றுதற் கர்த்தா'வாக அவர் மாறியது சற்றுப் புதுமை தான். ஆனால் குதிரை வாங்க என்ற பெயரில் அவர் போனது உண்மை. அப்படியானால் இதற்கு எப்படிச் சமாதானம் கூறுவது? அவருடைய நல்லூழ் அவரை வருக என்று அழைத்தது. விதி நேரிடையாக எதனையும் செய்வதில்லை யல்லவா? எனவேதான் குதிரை வாங்கப் போவதாக ஒரு காரணத்தை (வியாஜம்) ஏறட்டுக் "கொண்டு நல்லூழ் தொழிற்பட்டது என்று கூறவேண்டி யுளது. திருவாதவூரரின் திருப்பெருந்துறைப் பயணம் வெறும் குதிரை வாங்கப் புறப்பட்ட யாத்திரை' என்று கூற முடியாமல் அவருடைய ஆன்ம யாத்திரை' என்று கூறு முறையில் அமைந்துள்ளது. இந்த ஆன்ம யாத்திரையில் புறப்பட்ட திருவாதவூரர் திருப்பெருந்துறையை அணுகும் போதே ஒருவகை மாற்றத்தை அடைகின்றார். தம்முள் ஒரு மாற்றம் நிகழ்கின்றது என்பதை அவரே உணர் கின்றார். ஆன்ம யாத்திரையில் ஏற்படும் மாற்றம் இரு 244

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/245&oldid=852699" இலிருந்து மீள்விக்கப்பட்டது