பக்கம்:மணிவாசகர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகைப்படும். முதலாவது படிப்படியாக நிகழும் மாற்றம். இரண்டாவது திடீரென்று நிகழும் மாற்றம். பிறப்பிலேயே. கருவில் திருவுடையராகப் பிறப்பவர்களும் உண்டு. விடா உன்ழப்பின் மூலம் பெரியவர்களாகிறவர்களும் உண்டு. கருவில் திருவுடைய தன்மை கணிதம், விஞ்ஞானம், இசை ஆன்மீகம் முதலிய எத்துறைகளில் வேண்டுமானா லும் வெளிப்படலாம். அது வெளிவருவதற்குரிய ஒரு சந்த ருப்பம் தேவைப்படுகிறது. மணிவாசகரைப் பொறுத்த மட்டில் இத்தகைய சந்தருப்பம் திருப்பெருந்துறையில் கிடைத்தது. கிடைத்தவுடன் உள்ளே மறைந்திருந்த அப். புதுமை திடீரென வெளிப்பட்டது. இவருள் நிறைந்து வெளிவருவதற்குரிய சந்தருப்பத்திற்குக் காத்திருந்த மாற்றத்தைத் திருப்பெருந்துறையில் இருந்த ஞானாசிரி யன் திறக்க உதவினான் என்றாலுந் தவறில்லை. இத்தகைய திடீர் மாற்றம் அடைந்த மற்றொரு, பெரியார் கண்ணப்ப நாயனாராவார். திருவாதவூரர் திண் ணனார் என்ற இருவருமே இத்தகைய முழு மாற்றத்தை. (Metamorphesis) அடைந்தவர்களாவர். இருவருடைய ஆன்ம யாத்திரையிலும் இம் மாற்றம் பிறர் எதிர்பாரா வகையில், இடத்தில் நிகழ்ந்தது. அந்த இடங்கட்கு இவர் கள் செல்லும்போதே ஏதோ ஒரு மாற்றம் தம்முள் நிகழ். வதை உணர்ந்தனர். அதற்குரிய காரணத்தை இருவரும். அறிய முடியவில்லையாயினும் அவ்விடத்தை நெருங்கும். போது தம்முள் நிகழும் மாற்றத்தை அறிந்தனர் என்றே. இவர்கள் வரலாறு கூறுகிறது. திண்ணனார் காளத்தி, மலையை முன்னர்ப் பார்த்திராமையின் நாணன் என்ற ஏவ. லாளனிடம் இது யாது?’ எனக் கேட்டார். அவன் அம். மலைமேல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் வா என்று. அழைத்துப் போனான். நாம் எல்லாம் கோயிலில் சென்று. கடவுளைக் கும்பிடும் முறையில்தான் நாணன் அழைத்தான். அம் மலையை நெருங்க நெருங்கத் திண்ணனார் தம்முள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்து 'ஆவதென் இதனைக் 245.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/246&oldid=852701" இலிருந்து மீள்விக்கப்பட்டது