பக்கம்:மணிவாசகர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு: இங்கு அணைதொறும் என்மேற் பாரம்போவ தொன்று உளது போலும் (கண் புரா-97) என்று கூறு கிறார். இதே போன்ற ஒரு நிலை திருவாதவூரருக்கும் திருப்பெருந்துறையை நெருங்குகையில் ஏற்பட்டதாக அறிகிறோம். - திண்ணன் காளத்தி மலையை அடைந்த உடனேயும், திருவாதவூரர் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனைக் கண்டவுடனேயும், திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட வுடனேயும் மேலே கூறிய முழுமாற்றத்தை (Metamorphosis) அடைந்தனர். அது ஏற்படுவதற்கு முன்னர் முறையே திண்ணனாகவும் திருவாதவூரராகவும், ஞானசம், பந்தராகவும் இருந்த இம் மூவரும் கண்ணப்பராகவும், மணி, வாசகராகவும், சிவஞானசம்பந்தராகவும் மாறிவிட்டனர் என அறிகிறோம். இந்த நுணுக்கத்தைப் பலரும் அறியா விடினும் தொண்டர் சீர் பரவ வல்லவராகிய சேக்கிழார் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் கண்ணப்பர் வர லாற்றில் பழைய திண்ணன் மறைந்து புதியவர் தோன்றி விட்டார் என்பதை 'தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார்' {கண். புரா 154) என்றும், திருஞான சம்பந்தர் புராணத் தில் தாவில் தனிச் சிவஞானசம்பந்தர் ஆயினார்' (ஞான. .பு. 69) என்றும் கூறினார். இங்குச் சேக்கிழார் குறித்துள்ள சொல்லைச் சற்றுக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். சிவ ஞானசம்பந்தர் ஆயினார்’ என்று கூறுவதில் ஆயினார் என்ற சொல் பொருளாழம் உடையது. ஒன்று ஒன்றாக மாறுவதைத்தான் ஆயிற்று என்று கூறுகிறோம். அரிசி முழுமாற்றம் அடைந்து சோறாக மாறி விட்டதைத்தான் சோறு ஆயிற்று' என்று கூறுகிறோம். எனவே ஞானப்பால் உண்ட பின்னர் அவர் சிவபாத இருதயர் மகனல்லர் என் பதைக் குறிக்கவே ஆயினார்’ என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். இவ்வாறு சேக்கிழார் கூறக் காரணம் உண்டு. ஞானப் பால் அருந்தியதன் பின்னர் தந்தை' என்ற சொல்லைக் 246

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/247&oldid=852703" இலிருந்து மீள்விக்கப்பட்டது