பக்கம்:மணிவாசகர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு ஞானசம்பந்தர் இறைவனைக் குறித்தாரே தவிரச் சிவபாத இருதயரைக் குறிக்கவே இல்லை. அதேபோலத் திண்ணனாரும் தம் தந்தை, உறவினர் யாரையும் அறிந்து கொள்ளும் மனநிலையை இழந்துவிட்டார். இம் மாறு பாட்டை நன்கு உணர்ந்தமையின் சேக்கிழார் ஆயினார்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். துரதிஷ்டவசமாகத் திருவாதவூரர் புராணத்தைச் சேக்கிழார் போன்றவர்கள் பாடவில்லையாகவின் அவரிடை நிகழ்ந்த இந்த மாற் றத்தை அறிந்து நம்பியோ, அன்றிப் பரஞ்சோதியோ பாட வில்லை. திருவாதவூரர் திருப்பெருந்துறையில் அடைந்தது திடீ. G)gast s5) #gpub(p(lp Drtsbspth (Spontaneous metamorphosis) என்று கண்டோம். அப்படியானால் அவருடைய ஆன்ம யாத்திரையில் கிடைத்த இம் மாற்றம் கடைசி வரையில் நிலைத்திருந்ததா? இம் மாற்றத்தில் பெற்ற அனுபவம், பூரண இன்பம் இறுதிவரை மணிவாசகரிடம் இருந்ததா? திருவாசகம் முழுவதையும் பார்ப்பவர்கள் இந்த அனுப வத்தை இழந்து மணிவாசகர் துடிப்பதை அறிய முடியும். அப்படியானால் இறைவன் திருவருள் கிட்டினர்லும் அதுவும் ஒரோவழி நிகழ்ந்து மறையக் கூடியதுதானா? என்ற வினா வும், கிடைத்த திருவருளை வைத்துக் கொள்ளக் கூடிய தகுதி மணிவாசகரிடம் இல்லாமற் போய்விட்டதா என்ற வினா வும் வரத்தான் செய்யும். திருவாசகத்தில் அவர் அனுப வத்தை இழந்து வருந்தும் பகுதிகள் அனைத்தும் நம் போன்றவர்களுடைய துயரத்தை ஏறட்டுக் கொண்டு பாடி யவை என்ற விளக்கத்தை ஏற்க என்மனம் இடந்தரவில்லை. அத்துயரம் உண்மையிலேயே அவர் அடைந்த துயரந்தான். அவர் அடைந்த உண்மையான துயரந்தான் என்றால், திருவருள் அவரைக் காக்க வலுவிழந்து விட்டது என்றோ, அவர் திருவருளை வைத்துப் படைக்கும் ஆற்றல் பெற வில்லை என்றோ முடிவுக்கு வரவேண்டிய இன்றியமை யாமை இல்லை. இவை இரண்டு தவிர, வேறு ஏதேனும் 2.47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/248&oldid=852705" இலிருந்து மீள்விக்கப்பட்டது