பக்கம்:மணிவாசகர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ என் எம்பிரான்! (சதக - 93} நாயி னேனை நலமலி தில்லையுள் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்' (கீர்த்தி 127.130) இவ்வாறு இறைவனே அவரை ஈண்டு இருக்க எனப் பணித்து மறைந்தான். என்று அவரே கூறுகின்றமையின் இது ஏன் நிகழவேண்டும் என்ற வினாத் தோன்றத்தான் செய்கிறது. ஒரு சில சமயங்களில் நம்முடைய அறிவை யெல்லாங் கொண்டு ஆராய்ந்தாலும் விளங்கிக் கொள்ள முடியாத சில நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந் நிகழ்ச்சி நடைபெறும்போது நிகழ்ச்சிக்குடையாரும் நாமும் வருந்துகிறோம். ஆனால் பின்னர்த்தான் அது ஏன் நடந்தது என்பதை அறியமுடிகிறது. சக்ரவர்த்தித் திருமகனைத் 'தாய் கையில் வளர்ந்திலன்' என்று கூறும்படியாக வளர்த்து 'விராவரும் புவிக் கெலாம் வேதமேயன இராமனைப் பயந்த எற்கு இட ருண்டோ? (மந் சூழ்.54) என்று கேட்ட அதே கைகேயி தான் கணவன் இறப்பதையும் பொருட்படுத்தாமல் இராமனைக் காட்டிற்கு அனுப்பினாள். அதனை விளக்க வந்த கவிஞன் அவள் இரக்கமின்மை யன்றோ இன்று இவ் வுலகங்கள் இராமன், பரக்கும் தொல் புகழ் அமு. தினைப் பருகுகின்றது' (மந்.சூழ்.85) என்று கூறுகிறான். அதேபோன்று மணிவாசகருக்குத் தந்த அனுபவத்தை ம்றுபடியும் வாங்கிக் கொண்டு இங்கு இருக்க' என இறைவன் கூறிப் போனதனால் என்ன நிகழ்ந்தது? இவ்வாறு செய்யவில்லையாயின் உடன் வந்த அடியருடன் —16 249

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/250&oldid=852710" இலிருந்து மீள்விக்கப்பட்டது