பக்கம்:மணிவாசகர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டத் தக்கது அறிவோய் நீ" வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே (499) - 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும் குன்றே அனையாய்! என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ?” ஆயக்கடவேன் நானோ தான் என்னதோ இங்கு

  • அதிகாரம்?"
  • ... . . . . . . . . . . . . . . . . . . . .

மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும். அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால - அழகுடைத்தே (குழைத்த பத்து-6, 9) இதனை அடுத்து ஒருபடி மேலே சென்று தாம் ஒன்றை யும் கேட்க உரிமை இல்லை என்பதை நிலைநாட்டிய பிறகு அவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுதலே வாழ்வின் குறிக்கோள் என்பதையும், எது எமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்" (பள்ளி எழுச்சி-7) என்றும் கூறிவிடுகிறார். முற்றிலும் இறைவனுடைய திரு வருளின்படி நடக்க வேண்டிய ஒரு கருவியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் நிலையில், 'இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்' (விண்.18) என்று கூறுவதன் மூலமும் இதனை அடிகள் நன்கு அறிந் திருந்தார் என்பதை அறியமுடிகிறது. மதுரையில் இருந்து 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/254&oldid=852718" இலிருந்து மீள்விக்கப்பட்டது