பக்கம்:மணிவாசகர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளைப் பெற்றபின் உறுதியாக அழிந்திருக்கும். அப்படி இருக்க விட்டுப் போனதன் நோக்கம் அவரால் உலகு ஒரு பயனைப் பெறவேண்டும் என்பதாகவே இருத்தல் வேண்டும் என்பது உறுதி. இந்த வினாடியிலிருந்து திருவாதவூரர் என்ற பாண்டி மன்னனின் அமைச்சர் இல்லை. இறைவன் பணியை நிறைவேற்றும் ஓர் அடிமைதான் உள்ளார். இந்நிலையில் ஒரு சிலர் மனத்திலாதல் ஒர் ஐயம் நிகழ இடனுண்டு. திருவாசகம் போன்ற ஒரு நூல் தோன்ற வேண்டும் என்று இறைவன் நினைத்தால் அதனை முடித் தற்குத் திருவாதவூரர் போன்ற ஒருவரை இத்துணைத் தொல்லைப்படுத்தி அவர் அழுது அழுது பாடுமாறு செய்ய வேண்டுமா? இத்துணைத் துயரத்தை அவர் அடையாமலும் பாடுமாறு செய்திருக்கலாமே என்று கருதிக் கேட்க இடம் உண்டு. அது உறுதியாக நடந்திருக்கக் கூடியதுதான்; இறைவன் கருதி இருப்பின் திருவாசகத்தை மணிவாசகர் பாடி இருத்தலுங்கூடும். அதற்குத் திருவாசகம் என்ற பெயர் வந்திருத்தலுங்கூடும். ஆனால் அது இன்று நாம் படித்து உருகும் திருவாசகமாக அமைய முடியாது. பிறர் படுந்துயரை ஏறட்டுக் கொண்டு பாடுவது வேறு; தாமே அந்த அனுபவத்தைப் பெற்றுப் பாடுதல் வேறு. இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டுமாயின் தன்னுணர்ச்சிப் பாடல்கள் (Lyric poetry) பலவற்றைப் படித்துப் பார்த்தால் நன்கு விளங்கும். பாரி மகளிர் தம் தந்தை இறந்தமை குறித்துப் பாடியதாக உள்ள பாடலின் இறுதி வரியை நோக்க வேண்டும். 辭

  • * * * * * * * * * * * * * * s : * * * * * * *

வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றுங் கொண்டார்யாம் எங்தையு மிலமே' - (புறம் 1.12) யாம் எந்தையும் இலமே என்பதிற் காணப்பெறும் அவலத்திற்கும் பிற பிற புவவர்கள் பிற மன்னரின் இறப்புக் 254

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/258&oldid=852725" இலிருந்து மீள்விக்கப்பட்டது