பக்கம்:மணிவாசகர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பொழுதே கவிதையில் பிழிந்து தருகிறார். ஆகலின் எத்துணைக் காலமாயினும் அப்பாடல்கள் தம்மைப் படிப்ப வர்களை உலுக்கிவிடும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் ஒரு வியப்பு என்னையெனின் திருக்கோவையார் பாடல்களில் காணப் பெறும் கவிதைச் சிறப்பு, கட்டுக் கோப்பு, கற்பனை, சொல் சிறப்பு, உவமை உருவக நயங்கள் எதுவும் திருவாசகத்தில் இல்லை; என்றாலும் அனுபவம் பிட்டுப் பிட்டு வைக்கப் பெற்றுள்ளது. ஒரு பாட்டிற்கும் அடுத்த பாடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஒரே பாடலிற் கூட முன்னுக்குப் பின் தொடர்பில்லாமலும் இருக்கும். - அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்று கின்றேன் உடையோனே! திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண் டாய் புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீதங் தருளாதே குழகா கோல மறையோனே! கோனே! என்னைக் குழைத்தாயே!” (குழை. பத்து -10) முதல் இரண்டடிகளில் அவன் வடிவுகாட்டி ஆட்கொண்ட தைக் கூறும் அடிகள் பெரிய பதந் தரவில்லை என்று மூன்றாம் அடியில் குறைப்படுகிறார். திருமேனி காட்டு வதைவிடப் பெரிய பதம் எதுவும் உண்டா? இதனை அடிகள் அறியாதவரா? பின்னர் ஏன் இவ்வாறு பாடுகிறார்? காட்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் விரும்பிய விருப்பம் ஈடேற வில்லையாகலின் அவ்வருத்தம் மூன்றாமடி யில் வெளிப்படுகிறது. - திருவாசகம் சிந்தித்துத் தெளிந்து, ஆராய்ந்து, பாடப் பெற்ற கலையாக முகிழ்த்த பாடல்கள் அல்ல. அவை பொள்ளெனத் (Spontaneous) தோன்றிய பாடல்களே யாகும். தேவாரம் முதலியவைகூட இத்தலைப்பில் அடங்கா. அவை தீர்ந்த சிந்தனையின் பயனாக வெளிவந்தவை. பல 256

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/260&oldid=852731" இலிருந்து மீள்விக்கப்பட்டது