பக்கம்:மணிவாசகர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயங்களில் எந்தத் தலத்தில் பாடப்படுகின்றனவோ அந்த ஊரின் பெயருக்கேற்பவே பாடல் அடிகள் தொடங்குவதைக் காண்டல் கூடும். இவ்வாறு கூறுவதால் தேவாரம் பக்திப் பாடல்கள் அல்ல என்று கூறுவதாக நினைத்து யாரும் இடர்ப்பட வேண்டா. பாடல்களைத் திறனாய்வு செய் கின்ற முறையில் இந்த இரண்டு பிரிவினைகள் உண்டு. Guirsir@srørġ GgTsir pili (Spontaneous poetry or Dionysian poetry) பாடல் என்றும், சிந்தித்துப் பாடப்படுபவை (Premeditated poetry of Appołonían poetry) argir gyih இருவகை உண்டு. ஆசு கவிகள் எனப்பெறுபவை எல்லாம் பொள்ளெனத் தோன்றிய பாடல்கள் எனினும் அவை அனுபவத்தை அப்படியே பிரதிபலிப்பன என்று கூறமுடி யாது. தீர்ந்த சிந்தனையின் பயனாக வெளிப்படினும் தேவாரம் பிரபந்தம் என்பவை அனுபவத்தை அப்படியே வெளியிடுபவைகளாம். உதாரணமாக நம்பியாரூரரைப் பாடுக என்று பணித்து இறைவன் பித்தா' என்று அடியெடுத்துத் தந்தான். உடனே 'பிறைசூடி பெருமானே’ என்று ஏன் வந்ததெனில் திருஞான சம்பந்தர் பாடலில் சுந்தரர் ஈடுபட்டிருந்தமையின் அவரு டைய சொற்கள் உடனே நினைவுக்கு வரப் பாடினார். அடிகளின் அனுபவம் அப்படி அப்படியே வெளிப்படுகிற தென்பதைத் திருவாசகத்தை ஒருமுறை கற்பவர்களும் அறிய முடியும். திடீர் திடீரென்று அவருடைய எண்ண ஓட்டங் களில் தோன்றும் மாற்றங்கள் இதனை அறிவுறுத்தும். ஆன்ம யாத்திரையில் ஏற்படும் மேடு பள்ளங்கள் அப்படி அப்படியே வெளிப்படுத்தப்படுகின்றன. எல்லையில்லாத, ஆனந்தம் தோன்றுவதும் அதை இழந்து விட்ட ஆராத் துயர மும் அடுத்தடுத்துத் தோன்றலையும் திருவாசகத்தில் காண லாம். - : - - "கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் - கவாநதுனன. இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி - நாயேன் (பிரார்த்தனை-7) 25.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/261&oldid=852733" இலிருந்து மீள்விக்கப்பட்டது