பக்கம்:மணிவாசகர்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*அருள் புரிந்தனை புரிதலுங் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப் பாகா' (செத்திலா-3) என்பரம் இல்லா இன்னருள் தந்தாய் யான்.இதற்கு இலன்ஒர் கைம்மாறு’ (கோயில்-2) இத்தகைய முறையில் ஆனந்தத்தில் அழுந்தியிருந்து அது மறைந்துவிட்டதெனக் கவல்கின்றார். ஆன்ம யாத் திரையில் ஒரு முக்கியமான கட்டமாகும் இது. கிடைத்தி பொருள் கை நழுவி விடுகிறதென்றால் அதனை வைத்துக் கொள்ளும் தகுதி இல்லை என்பதுதானே பொருள். எனவே தம் ஆனந்த பரவச நிலை கைநழுவிவிட்டது என்றால் அது தம் குற்றத்தாலேயே நேர்ந்தது என்று கருதி வருந்துகிறார் அடிகள், சத்தியமே வடிவான இறைவன் ,தாம் பொய்யன் என்பதனால் ஆட்கொண்டு அழைத்துப் போகாமல் விட்டுச் சென்றுவிட்டான் என்று வருந்துகிறார். திருச்சதகம் முழு வதிலும் இம்மன நிலையைக் காண்டல் கூடும். 'பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்” (52) 'வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை' (73) விக்கக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கெனை . - வைத்தாய்' (81) போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போக்தோமே" (85) "யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்' (90) இவ்வாறு தம் குற்றம் என்று தாம் கருதுவதை மிகைப் படுத்திக் காட்டிவிட்டு இறைவனிடம் தம் குற்றத்தைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறார். அரைசே! அறியாச் சிறுநாயேன் பிழைக்கு அஞ்சல் - . . . . . என்னினல்லால் (நீ. வி. 87) r 258

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/262&oldid=852734" இலிருந்து மீள்விக்கப்பட்டது