பக்கம்:மணிவாசகர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுகிறார் அடிகள். ஆன்ம யாத்திரை எத்துணைத் துன்பம் நிறைந்தது என்பதைப் போற்றித் திருவகவலில் வரிசைப்படுத்துகிறார். தாயின் கருவில் உருவெடுத்த முதல் மாதத்திலிருந்து தோன்றும் துன்பங்களையெல்லாம் தாண்டிப் பிறந்துவிட்டால், பிறந்த பின்னர் வளரும் பொழுது ஏற்படுந் துன்பங்கள் வரிசைப்படுத்தப்படு கின்றன. செல்வமும் ஆன்ம யாத்திரைக்குத் தடைதான். ஆனால் வறுமை தேவலாமா என்றால் செல்வத்தைவிட வறுமை பொல்லாதது. அதுவும் அந்த யாத்திரைக்குத் தடை செய்யும் என்பதை,

  • செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும், (போற். அக, 38.39) என்று கூறுகிறார். - இத்துணைத் துயரங்களையும் தாண்ட முயன்று. இறுதியில் ஒரளவு மன அமைதியை அடைந்து தெய்வம் என்ற நம்பிக்கை வந்துவிட்டாற் போதுமா?’ என்றால் அந்த நம்பிக்கை வந்த பிறகும் ஏற்படுகிற துயரங்களும் தொல்லைகளும் அனந்தம். - தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி, முனிவிலாதது ஒர் பொருளது கருதலும் ஆறுகோடி மாயா சக்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின ஆத்தமானார் அயலவர் கூடி காத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அறைவ தாக அரற்றி மலைந்தனர்". (போ. அக. 42 முதல் 48) ஆன்ம யாத்திரையில் ஏற்படும் இத்துணைத் தொல்லைகளையும் அடிகள் நம் பொருட்டாக அடுக்கிக் 261

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/265&oldid=852742" இலிருந்து மீள்விக்கப்பட்டது