பக்கம்:மணிவாசகர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுகின்றார். இறுதியடியில் வரும் "முனிவிலாதது ஒர் பொருள் என்ற சொல்லைக் காண்டல் வேண்டும். எந்தப் பொருளை நாடி ஆன்மா தன் யாத்திரையைத் தொடங்கு கிறது என்பதை மிகச் சிறந்த முறையில் விளக்குகிறார். அடிகள் ஒரே ஒரு சொல்லால். அப் பொருள் விருப்பு வெறுப்பு இரண்டையுங் கடந்து நிற்பது' என்ற பொரு ளைத் தரும் முனிவு இலாதது" என்ற சொல்லால் பொரு ளின் இலக்கணத்தை வரைந்து காட்டினார். ஆன்ம யாத்திரையில் எதிர்ப்படும் மற்றோர் இடுக் கணையும் அடிகள் எடுத்துக் காட்டுகிறார். வாணாளில் குறிக்கோள் என்ற ஒன்றில்லாமல் சுற்றி வருகின்றவரை யாதொரு துயரமும் இல்லை. இது கருதியே பொதுமறை தந்த பெரியார் தேவர் அனையர் கயவர் அவருந்தாம், மேவன செய்து ஒழுகலான்' என்றும் நன்று அறிவாரின் கயவர் திருவுடையர், நெஞ்சத்து அவலம்இலர் (குறள். கயமை 3,2) என்றும் கூறிப்போனார். ஆனால் ஏதாவது ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதனை அடைய முயலத் தொடங்கினால் தொல்லைகள் அடுக்கி வந்துகொண்டே இருக்கும். இது வாழ்க்கையில் அன்றாடம் காணும் அனுப வம். எனவே அதனையும் கூறத் தொடங்கிய அடிகள் முனிவிலாத பொருளைக் கருதத் தொடங்கியவுடன் ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு மாயைகளைக் காட்ட”த் தொடங்குவதையும், நாத்திகர் உபதேசஞ் செய்யத் தொடங்குதலையும், பிற சமயவாதிகள் இந்த ஆன்மாவைத் தத்தம் வழிக்கு இழுக்க முயல்வதையும் வரிசைப்படுத்திக் காட்டுகின்றார். - எதுபற்றியும் கவலைப்படாமல் இருப்பவர் எவ்விதத் தொல்லையும் இன்றி இருப்பதும், இறையுணர்வு பெற்றுச் சரண் புகுகின்றவர்கள் அனைத்துத் தொல்லைகட்கும் ஆளாவதையும் இவ்வுலகிற் காண்கிறோம். மிக இளங் குழந்தையாகிய நம்மாழ்வார் இதனைக் கண்டு அதி சயித்து இதோ கூறுகிறார். 一262

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/266&oldid=852743" இலிருந்து மீள்விக்கப்பட்டது