பக்கம்:மணிவாசகர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவத்தில் வந்து நின்று தடை செய்யும் என்பதனைக் கலாபேதத்த கடுவிடம்' என்ற சொற்களால் குறிப்பிட்டார். மனிதனுடைய வீழ்ச்சிக்குக் காரணமானதும், தடை செய்யப் பெற்றதுமான பழத்தை ஆதாமும் ஏவாளும்' உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் உன் டாக்கி அவர்களை அதை உண்ணுமாறு செய்து, அவர்களை வீழ்ச்சியடையுமாறு செய்ய வந்த சாத்தானும் ஒண்திறன் பாம்பாகவே வடிவு கொண்டு வந்தான் என மில்டன் கூறு வதும் இவ்விடத்திற்குப் பொருந்த நோக்குக. ஆன்ம யாத்திரையில் ஏற்படும் தடைகளைக் கூற வந்த புத்தன் கண்டு கூறிய வழிகள் ஒரளவு சிறந்தவைதாம். அவற். றைக் கடைப்பிடிப்பதால் உய்கதி அடைய முடியாதா என்ற வினாத் தோன்றலாம். புத்தன் கண்டு கூறிய 'துக்கம்; துக்க உற்பத்தி; துக்க நிவாரணம்; துக்க நிவாரண மார்க்கம்" என்பவையும் சிறந்த வழிகளே. ஆனால் இவற்றை உள்ள வாறு அறிந்து கடைப்பிடிக்க வேண்டுமாயின் கூர்மையான அறிவு தொழிற்பட வேண்டும். எவை துக்கம்? துக்க உற்பத் திக்குக் காரணம் யாவை? நிவாரணமாவது யாது? அதற். குரிய மார்க்கங்கள் யாவை? என ஆராய்ந்து காண்பது எல் லார்க்கும் எளிய செயலன்று. அவ்வாறு கண்டாலும் பொறி புலன்களை அடக்கி ஒரு வழிப்படுத்தி இம்மார்க்கத்தில் செலுத்துதல் அதைவிடக் கடினமாகும். இதற்கு உதவியாக' "சத்சங்கம் முதலியவற்றைப் புத்தன் கூறினும் இவ்வழியில் உள்ள இடர்ப்பாடு மிகுதி என்பதில் தடையில்லை. ஆன்ம யாத்திரை சிறக்க வேண்டுமாயின் பொறி புலன் களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்னும் அருக சமயமும், அறிவின் துணைகொண்டு ஆய்ந்து அவற்றைத் தியானம்' என்பதன் மூலம் அடக்கி ஆளவேண்டும் என்னும் புத்த, சமயமும் பழக்கத்திற்கு வருதல் மிக மிகக் கடினம். எனவே, அடிகள் எளிய வழி ஒன்றை வகுத்துக் காட்டுகிறார். ஆன்ம யாத்திரையில் பொறி புலன்களை அடக்கித்தான் செல்ல 264

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/268&oldid=852745" இலிருந்து மீள்விக்கப்பட்டது