பக்கம்:மணிவாசகர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் துணையால்தான் முடியும். அவன் "முனிவிலாத வன்’ என்றமையின் இவற்றால் ஏற்படும் துன்பத்தைப் போக்க வல்லவன் என்பதும் அறியப்படும். ஆன்ம யாத்திரையின் குறிக்கோளாகவுள்ள இறை வனைப் பல்வேறு வகையாகத் திருவாசகம் கூறிச்செல்கிறது. என்றாலும் 'தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தவ' ரிடையே ஏற்படும் ஓர் இக்கட்டான வினாவை: ஆசங்கித்தும் திருவாசகம் விடை கூறுகிறது. இறைவனைக் கருணைக் கடல் என்று எல்லாச் சமயங்: களும் ஏற்றுக் கொள்கின்றன. அப்படியானால் துயரம் நிறைந்த உலகை அவன் ஏன் படைத்தான்? கருணைக் கடல் என்பதுண்மையானால் உலகிடை துயரம் நிலவுவது முறையா? அப்படியானால் கருணைக் கடலாகிய இறைவ. னின் வேறாகத் துயரத்தை உண்டாக்கும் வேறு ஒருவன் உண்டா? இவ் வினாக்களுக்கு வெவ்வேறு சமயங்களும் வெவ்வேறான விடையைக் கூறின. ஆனால் இந் நாட்டில் தோன்றிய சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களும் தனியான ஒரு விடையைத் தந்தன. குற்றம், குணம், நன்மை, தீமை என்று நம்மாற் பிரித்துக் கூறப்படும் இவை அனைத்துமே இறைவனுடைய படைப்புகள்தாம். முரண்பாடுடையவை போற் காணப் பெறும் இவற்றிடையேதான் முழுமுதல் காட்சி தருகிறான் என்பதை இந் நாட்டுச் சமயச் சான்றோர் அனைவரும் எடுத்துக் காட்டினர். - 'குற்றம்நீ குணம்நீ கூடலாலlவாயிலாய், எனத் திருஞானசம்பந்தர் கூறுகிறார். மணிவாசகர். "மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு சோதியுமா யிருளாயி னார்க்குத் துன்பமுமா யின்பம் ஆயினார்க்கு பாதியுமாய் முற்றும் ஆயினார்க்கு 268:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/272&oldid=852751" இலிருந்து மீள்விக்கப்பட்டது