பக்கம்:மணிவாசகர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு - ஆதியுமாய் அந்தம் ஆயினார்க்கு (பொற்சு-20) என்று கூறுதலும் இக்கருத்தை வலியுறுத்தல் காணலாம். இதே கருத்தைக் கம்பநாடனும் கூறுதல் அறிதற் குரியது. - : மேவா தவரில்லை மேவி ன வருமில்லை, ஒளியொடு இருளில்லை மேல் கீழுமில்லை மூவாமை இல்லை, மூத்தமையு மில்லை முதல் இடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை தேவா இங்கு, இவ்வோகின்ஒன்று நிலை’ "நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே: (சபதங். பிற. நீங்கு 29, 30) இத்தகைய முறையில் முரண்பாடு என்று நாம் நினைப்ப வற்றைக் கூறி இவற்றிடையேதான் அம் முழுமுதல் இருக் கிறதென்பதை அடிகள் காட்டிய பிறகு அதன் இலக் கணத்தை ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி” (எம்பா-1) சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நின்ற நின் தன்மை (கோயில்-7) என்றும் விரிவா கப் பேசுகிறார். இவ்வாறு கூறினமையின் யாத்திரை செல்லத் துணிந்த ஆன்மா ஒரளவு அமைதியடைந்து தன் துயர் போக்கக் கூடிய தலைவன்தான் என்பதை அறிந்து, உணர்ந்து உறுதி கொள்கிறது. ஆனால் அடுத்த ஐயம் உடனே தோன்றி விடுகிறது. இத்துணைப் பெரிய பொருள் அது எனில் அற்பமாகிய எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு யாது? என் குறை தீர்க்க அது இறங்கி வருமா? என்ற ஐயம் நியாயமானதே. - . . இவ் வினாவிற்கு விடை தருவார் போல அடிகள் இறைவனின் எளிவந்த தன்மையை (செளலப்பியம்) நூற் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களிற் கூறிக்கொண்டு செல்கிறார். 269

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/273&oldid=852752" இலிருந்து மீள்விக்கப்பட்டது