பக்கம்:மணிவாசகர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்பழித்து இம்மண்புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்” அந்தரத்தே கின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான் (குயில்-5, 6) "நாயில் ஆகிய குலத்திலும் கடைப்படும் என்னை - - கன்னெறி காட்டித் தாயில் ஆகிய இன்னருள் புரிந்த என் தலைவன்' - (சதக-39). "பலமா முனிவர் கனிவாடப் பாவியேனைப் பணிகொண்டாய் (சத.54). 'ஈறுஇலாதt எளியை ஆகிவந்து ஒளிசெய் மானுடம் ஆக நோக்கியும் (சத. 91} 'கல்லைமென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை மின்கழற்கு அன்பன் ஆக்கினாய் (சத. 94) ‘நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை - - - (அம்மா.7 இறைவனுடைய எளிவந்த தன்மையைக் கூறுவதிலும் ஒரு தனிச் சிறப்பைக் கூறுகிறார் அடிகள். இறைவன் ஆட் கொள்ள வேண்டும் என்று நினைத்தாற்கூட ஆட்கொள்ள முடியாதபடி நம் மனம் கல்லாக இருப்பின் என்னாவது என்ற வினாவும் தோன்றலாமே! அந்த வினாவையும் எதிர் பார்த்து விடை கூறுவார் போலக் கல்லை மென்கனி ஆக்கும் வித்தை கொண்டு என்னை நின் கழற்கு அன்பனாக் கினாய்’ என்றும் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனை' (அம்மா-5) என்றும் கூறுகிறார். - - இதுகாறுங் கூறியவற்றால் யாத்திரை புறப்படும் ஆன்மாவுக்கு அமைதி கிட்டும் முறையில் எந்தப் பொருளின் உதவியை அந்த ஆன்மா நாடவேண்டும். அந்தப் பொருளின் இலக்கணம் யாது? அந்தப் பொருளுக்கும் 270

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/274&oldid=852753" இலிருந்து மீள்விக்கப்பட்டது