பக்கம்:மணிவாசகர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்கும் உள்ள தொடர்பு யாது? அந்தப் பொருள் நம்மை இறங்கிவந்து ஆட்கொள்ளுமா? அதன் எளிவந்த தன்மை எத்தகையது? நம்முடைய மனம் கனியாததாக இருப்பினும் அது உதவ முன்வருமா என்ற வினாக்கட்கு எல்லாம் விடை கூறினார் அடிகள். v" அடுத்துள்ள ஐயம் இவை யெல்லாம் அறிந்த பிறகு நாம் செய்ய வேண்டியது யாது என்ற வினாவாகும். நம் மாட்டுள்ள பொறி புலன்களை அடக்க முடியாது என்பதை " அடக்கும் ஆற்றல் தன்பால் இல்லை என்பதையும் *ன்ர்ந்து வருந்தும் ஆன்மாவுக்கு வழி கூறுகிறார் அடிகள். பொறி புலன்களை அடக்க முடியாதுதான்; ஆனால் அவற்றை மடைமாற்றம் செய்யலாமல்லவா? கண் எதை யேனும் பார்த்துத்தான் திரும் எனன் ஏனையவற்றைப் பார்ப்பதைக் காட்டிலும் அவன் திருவடிகளைப் பார்க்கு மாறு மடைமாற்றம் செய்யலாம் அல்லவா? 'சிந்தனை கின்தனக்கு ஆக்கி காயினேன்.தன் கண் இணை கின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை" (சத.26) பொறி புலன்களை அடக்க முயன்று தோல்வியுறும் 'அவல நிலையைப் போக்குமுகத்தான் அடிகள் அவற்றை மடைமாற்றஞ் செய்வது மூலம் எத்தகைய காரியத்தைச் சாதிக்க முடியும் என்பதை அழகுற எடுத்துக் காட்டுகிறார். பொறிபுலன்களை வைத்துக் கொண்டு அவற்றால் அனு: பவிக்கப்பட வேண்டியவற்றையும் அனுபவித்துக் கொண்டு, ஆனால், எவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதில் மட்டும் மடை மாற்றம் செய்து கொண்டு வாழ்தல் என்றால் இதனைவிடச் சிறந்தது வேறு எது இருக்க முடியும்? ஆன்மா மகிழ்ச்சியுடன் யாத்திரையைத் தொடங்கும் வண்ணம் இத்துணை வழிகளையும் அடிகள் கூறிவிட்டார் 271

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/275&oldid=852754" இலிருந்து மீள்விக்கப்பட்டது