பக்கம்:மணிவாசகர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும் இன்னும் ஒரு வினா எஞ்சி நிற்கக் காண்கிறோம். பொறி புலன்களை மடை மாற்றஞ் செய்து ஆன்ம யாத்திரை செய்வதனால் ஏற்படக்கூடிய பயன் யாது என்பதே அந்த வினா. பயன் கிட்டுகிறது என்றால் எத்தகைய பயன்? எப் பொழுது கிட்டும்? என்பன போன்ற வினாக்கள் அடுக்கடுக் காய்த் தோன்றுகின்றன. - மிக நீண்ட காலங் கழித்துப் பயன் கிட்டும் என்றால் உயிர்கள் அதில் ஈடுபடாது என்ற மனித மனத் தத்துவத்தை அறிந்தவர் அடிகள். எனவே இப்பொழுதே கிட்டக்கூடிய இன்பம் கிட்டும் என்கிறார். உலகத்தில் இன்பம் என்றால் அதன் முடிவு துன்பமாய்த்தான் இருக்கும். இரட்டையாக உள்ள இவற்றிலிருந்து விடுபடுதலும் இயலாத காரியம். தேன் சுவையுடையது என்றால் அதனைக் குடித்த சிறிது நேரத்தில் வாயில் கசப்பு எஞ்சுதலை அறியமுடியும். இத் தகைய இன் பத்தில்கூட ஈடுபடும் உயிர்கள் துன்பக் சுலப் பில்லாத இன்பம் உண்டு என்றால், அதுவும் இப் பிறப்பி லேயே கிட்டும் என்றால் யார்தாம் அதனை வேண்டா என்பர்? மேலும் உலக இன்பங்கள் அனைத்துமே, ஒன்றே ஒன்று தவிர, எந்தப் பொறியால் அனுபவிக்கப்படுகின் றனவோ அந்தப் பொறிக்கு மட்டுமே இன்பந்தருவன. அதுவும் அனுபவிக்கும் அந்த நேரத்திற்கு மட்டுமே இன்பந் தந்து பின்னர் மறைந்து விடும் இயல்புடையன. இதன் எதிராகக் காதல் ஒன்றுமட்டும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐயம்புலனும் ஒண்டொடி கண்ணேயுள' (குறள் 101) என்றவாறு ஐம்புலனுக்கும் ஒரே நேரத்தில் விருந்தாகும் என வள்ளுவர் கூறுகிறார் அதிலுங்கூட இன்பத்திற்குக் காரணமான பொருள் நீங்கி விட்டால் துன்பமே எஞ்சும். - இவ்வாறு இல்லாமல் ஐம்புலனுக்கும் ஒருசேர விருந் தாகி, எப்பொழுதும் நீங்க்ாத விருந்தாக உள்ள இன்பம், துன்பக் கலப்பில்லாத இன்பம் ஏதேனும் உண்டா என்றால் உண்டு என்கிறார் மணிவாசகர். 272

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/276&oldid=852755" இலிருந்து மீள்விக்கப்பட்டது