பக்கம்:மணிவாசகர்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர்கள் திருவாசகத்தை நான் கலந்து பாடினார் கள். முழுத் திருவாசகமும் தேவைப்படவில்லை என்கிறார் வள்ளலார். திருவாசகத்தில் ஒரு வாசகமே அவரையும். உடையானையும் ஒன்றாக்கும் ஆற்றல் படைத்தது என். கிறார் அனுபவவாதியான அவர். இத்தகைய அனுபவத்துடன் ஆன்ம யாத்திரை செய்து அடிகளார் திருவாசகம் என்ற ஒப்பற்ற அனுபவப் பிழிவை நமக்குத் தந்துவிட்டு கூத்தப் பெருமானையே பொருளென்று காட்டிவிட்டு அவனுடன் இரண்டறக் கலந்தார். அவனையே பொருளெனக் காட்டியவர் சோதியில் கலந்தார் என்று கூறுகிறது வரலாறு. திருஞான சம்பந்தர் போன்ற பெரியோர்களின் வரலாறுகள் இறுதி யில் அவர்கள் சோதியிற் கலந்ததாகவே கூறுகின்றன. சோதியிற் கலத்தலாவது யாது? அவர்கள் சோதியிற் கலந் தார்கள். என்னில் அவர்களுடைய பூதவுடல் என்ன ஆயிற்று? இவ் வினாக்கள் தேவையற்றவைதாம். எனினும் பல. ருடைய மனத்தை மருட்டும் இயல்புடையன வாகலின் ஒருவாறு, இதற்கு விடை கூறுவதும் தேவையாகும். இப் பெருமக்கள் இறப்ப உயர்ந்தவர்களாயினும் இவர்கள் எடுத்த உடம்பு பஞ்சபூதச் சேர்க்கையால் ஆயது என்பதும் நோய் முதலியவற்றையும் ஒரோ வழி ஏற்கும் இயல்புடை யது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். நம்பியாரூர ராகிய சுந்தரரே நோய்வாய்ப்பட்டார் எனில் இதில் தவறு யாதும் இல்லை. அவ்வாறானால் இவர்கள் உடம்புக்கும் நம்போன்றோர் உடம்புக்கும் வேறுபாடு உண்டா? உண்டு. இவர்கள் ஆன்ம பலத்தால் உடலைக் கட்டுப்படுத்தும் பேராற்றல் படைத்தவர்கள். நம் போன்றவர்கள் உடம்பு இருப்பதும் கழிவதும் நம்கையில் இல்லை. ஆனால் இப். பெருமக்கள் தம் உடலை வேண்டுமானபடி இயக்கவும்,தாம் வேண்டும்பொழுது உதறி விடவும் தேவை ஏற்படின் ஒன்றுமே இல்லாமல் ஆக்கவும் வல்லவர்கள். . . . . . art

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/281&oldid=852761" இலிருந்து மீள்விக்கப்பட்டது