பக்கம்:மணிவாசகர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருவாசகமும், : :

பரஞ்சோதி முனிவரும்.

அடிகள், இறைவன் திருவருளைப் பெறுவதற்குத் தாம் எவ்வாற்றானும் தகுதியுடையவரல்லரென்றும், அங்ங்ன மிருக்கவும் அவ்வாண்டவன் தன் பெருங்கருணையினால் அருட்குரவனாகி எளிவந்து தம்மை வலிய ஆண்டுகொண்டு ஆராவின்பம் அளித்த செயல், "பெரியார்க்குச் செய்யுஞ் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல்-பொறிவண்டு பூமே லிசைமுரலு மூர அதுவன்றோ காய்மேல் தவிசிடு மாறு (பழமொழி-75) என்றாங்கு நாய்க்குத் தவிசிட்டதை ஒக்குமெனவும் கருதி இக்கருத்தைத் தாமருளிய திருவாசகத்திற் பல விடங் களிற் கூறியருளுகின்றார். அக்கருத்தை விளக்கும் பாட்டுக் கள், .கேட்டாரு மறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே யெல்லாங் கேட்டான், நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு காயி னேற்கே, காட்டா தனவெல்லாம் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாம் கேட்பித் தென்னை, மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டா னெம்பெருமான் செய்திட்ட விச்சை தானே' (திருச்சதகம்-28) 'ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ சுவடுவிட்டு நன்றாக வைத்தென்னை காய்சிவிகை ஏற்றுவித்த என்றாதை தாதைக்கும் எம்மனைக்குங் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்று தாய் கோத்தும் " (திருககோத்தும்பீ-8) 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/29&oldid=852764" இலிருந்து மீள்விக்கப்பட்டது