பக்கம்:மணிவாசகர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’பூமே லயனோடு மாலும் புகலரிதென் றேமாறி நிற்க வடியே னிறுமாக்க காய்மேற் றவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த திமேனி யானுக்கே சென்று தாய் கோத்தும்பி' (திருக்கோத்தும்பீ-20) கானாடி யணைவோனொரு காய்க்குத்தவி சிட்டிங் . கூாைருடல் புகுந்தானுயிர் கலந்தானுளம் பிரியான் தேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை யுறைவான் வானோர்களு மறியாததோர் வளமீந்தன னெனக்கே" . - : (உயிருண்ணிப்பத்து-2) கற்றறியேன் கலைஞானங் கசிந்துருகே னாயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்து உற்றிறுமாங் திருந்தேனெம் பெருமானே; யடியேற்குப் பொற்றவிசு காய்க்கிடுமா றன்றேகின் பொன்னருளே’ . (திருவேசறிவு-5) செம்மைநல மறியாத சிதடரொடுங் திரிவேனை மும்மைமல மறுவித்து முதலாய முதல்வன்றான் நம்மையுமோர் பொருளாக்கி காய்சிவிகை யேற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவாரச்சோவே' (அச்சோப்பதிகம்-9) என்பன. இங்ங்ணம் ஆறு இடங்களில் அடிகள் கூறியருளி யிருப்பதைக் கூர்ந்து நோக்கின் அவர் திருவுள்ளத்தில் இடை யறாது இக்கருத்து நின்று நிலவிக்கொண்டிருந்திருக்குமென் புது ஒருதலை. இவ்வுயரிய கருத்தை அடிகள் கூற்றாக வைத்து வேம்பத்தூர் நம்பியேனும், கடவுண் மாமுனிவரே னும் தங்கள் நூலில் யாண்டும் கூறினார்களல்லர். ஆண்ட வன் அருட்குரவனாய்ப் போந்து அடிகளுக்கு அரும் பொருளை அறிவுறுத்தி அடியார்களோடும் மறைந்தருளிய பின்னர் மணிவாசகப் பெருமானார் வருந்தும் பகுதியில், چھیاستسـتستتا۔ 2s.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/30&oldid=852766" இலிருந்து மீள்விக்கப்பட்டது