பக்கம்:மணிவாசகர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுடைய அடிகள் பல விடங்களில் நாயேன்” "நாயனை யேன் என்றும் நாயினுங்கடையேன்" என்றும் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பொருள்களையுடைய தொடர் களைக் கூறுமாறு என்னை? இன்னும் ஒரே அடியில் நாயிற் கடையாம் நாயேனை (குழைத்துபத்து 8) எனக் கூறி யருளியதற்குப் பொருள் யாது என அறிந்துகொண்டு மேற் செல்லுவோம். - பெரியோர்கள் மக்களிடத்தில் பெரும்பாலும் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழி குணங்களைத் தம்பாலேற்றிக் கூறுவர். அதனால் நாயினுங் கடையேன்” என்று கூறுங் கால் நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் குணங் கள் மக்களிடத்தில் அங்கன மில்லாமலிருத்தல் வேண்டும். அவை எவையென ஆராய்வோம். . 1. தன் தலைவனைப்போலவே பல்லாயிர மக்கள் உடை முதலியவற்றால் புனைந்து கொண்டு வரினும் சிறிதும் ஐயுறாது விரைந்து அவனை அறிந்து கொள்ளும் இயல் புடைமை. -. - 2. ஒரு பிடி சோறு ஒரு காலத்தில் ஒருமுறை ஒருவன் உதவினானாயின் அவனைத் தன் வாழ்நாள் உள்ளவரையும் நினைவிற்பதித்து வைத்திருத்தலுடன் அவனை எங்கேனும் காணின் தான் எத்துணைத் துன்பநிலையிலிருப்பினும் அதனைச் சிறுதும் பொருட்படுத்தாது தன் வாலைக் குழைத்து இன்முகங்காட்டல் முதலியவற்றால் தன் நன்றி அறிவ்ை அவனுக்குக் காட்டுதல். 3. தன் தலைவன் ஒரு பணியின்கண் தன்னை ஏவினா -னாயின் அப்பணி தன்னாற் செய்தற்கரிதாயினும் அதிந் செல்லின் தன் உயிர்க்கு ஈறு நேருமாயினும் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பணியிற் செல்லுதல். இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு. இனி இப்பண்புகள் மக்களிடத்தில் எம்மட்டிற் காணப் படுகின்றன என்பதைப் பார்ப்போம். as

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/36&oldid=852772" இலிருந்து மீள்விக்கப்பட்டது