பக்கம்:மணிவாசகர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திழி கண்ணிர் மழையும் வடிவிற்பொலி திருநீறும்; அந்த மிலாத்திரு வேடத் தரசுமெதிர் வந்தணைய' (திருஞான சம்பந்தர் புராணம். 270 எனவுங்கூறி அரசுகளின் அருள்வடிவத்தையும், தெருள் மொழியையும் நெக்கு நெக்குருகும் உள்ளத்தையும் அங்கை நெல்லிக்கனியென விளக்கியருனினர். - இனி நமது புலவர் பெருமக்களியற்றிய நூல்களைக் கொண்டு நுனித்து நோக்கினால் அவர்கள் இருவேறுவன்க்ப் படுகின்றனர். ஒருவகையார் தமக்கு இயற்கையாகப் பாடும் வன்மை அமைந்திருந்தும், தாமியற்றும் நூல்களில் இன்ன இன்ன பகுதிகளை இன்ன இன்ன இடத்திற்றான் கூற வேண்டுமென வரையறை செய்து கொள்ளாமற் பாடி முடித்தவராவர். அதனால் அந்நூல்களில் ஒருசெய்தியே பல விடங்களில் வருதல் கூடும். பிறிதொரு திறத்தார் தாம் இயற்றும் நூல்கள் எத் துணைப் பெரியவாயினும் அவற்றுள் இன்னின்னவற்றை இவ்விடங்களிற்றான் கூறவேண்டும் எனவும் இத்துணைச் செய்யுட்களால் முடிக்க வேண்டுமெனவும், இரண்டு இடங் களிற் கூறவேண்டிய செய்தி ஒன்றுநேரின் அதனை அவ் விரண்டிடங்களிலும் கூறி மிகைப்படுத்தாமல் இத்னை எங்குக்கூறின் இரண்டிடத்தும் கூறியதாகவும் சிறப்பாகவும் கற்போர்க்குக் களிப்பைத் தருவதாகவும் இருக்குமெனவும் தமது கூர்த்த மதியால் ஆராய்ந்து கூறுபவராவர். இன்னும் அவர் அங்கனமே வரையறுத்துக் கொண்டு நூல் செய்ன்தர னால் பலவாயிரஞ் செய்யுட்களுக்குப் பின்னே சொல்லப் போகும் இலக்கியம் ஒன்றை நினைவில் வைத்து அதற்கு முன்னரே இலக்கணங்கூறிச் செல்வதுங் கண்டு மகிழ்வதற் குரிய தொன்றாகும். இங்ங்ணம் நூல் யாக்கும் புலவர் பெருமக்கள் மிகச்சிலரேயாவர். அவருள் சேக்கிழார், கம்பர் முதலியோர் தலைசிறந்தவர். எடுத்துக் காட்டாக ஒவ் வொன்று ஈண்டுத் தருதல் மிகையாகாது. - ... به 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/45&oldid=852782" இலிருந்து மீள்விக்கப்பட்டது