பக்கம்:மணிவாசகர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக்குறும்ப நாயனார் தவத்தினால் மிக்கா ரென்பது, . - - - "வண்டு மருவுங் குழலுமை யாள்கேள்வன் செய்யதாளென்னும் புண்டரிக மகமலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்' (பெருமிழ்லைக்குறும்பர் புராணம்-3) என்பதனாலும் தமதுஞானகுரவராகிய ஆளுடைய நம்பிகள் ஆண்டவன் ஆணையால் வெள்ளையானை மேலேறித் திரு நொடித்தான்மலை .ெ ச ல் வ ைத ஞான நோக்கத்தால் முன்னரே உணர்ந்து கொண்டு, யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் உடலினின்றும் பிரிந்து முதனாளே அம்மலையை யடைந்தார் என்பதனாலும் தெளியப்படும். இப்பெரியார் சித்தி முதலியன கைவரப் பெற்றமைக்குக் காரணங் கூறுமுகத்தால், "நாளுநம்பி யாரூரர் காம நவின்ற கலத்தாலே *. ஆளும் படியா லணிமாதி சித்தியான அணைந்ததற்பின் மூளுங் காதலுடன்:பெருக முதல்வர் காமத்தஞ் செழுத்துங் கேளும் பொருளு முணர்வுமாம் பரிச வாய்ப்புக் r - - - கெழுமினார்" (பெருமிழலைக்குறும்பர் புராணம்-6) ஏனக் கூறுஞ் சேக்கிழார் பெருந்தகையார் இங்ங்னம் பின் னர்க் கூறப்போவதை நினைவில் வைத்து மூன்று சருக்கங் களுக்குமுன்-இருபத்திரண்டு புராணங்கட்கு முன்-ஆயிரத் தைஞ் ஆாற்றறுபத்தைந்து செய்யுட்களுக்குமுன் தடுத்தாட் கொண்ட புராணத்தில் நான்காவது பாட்டில் சுந்தரமூர்த்தி களுக்குப் பிள்ளைத் திருநாமமிட்டார்களென்று சொல்லு: மிடத்து, - தம்பிரா னருளினாலே தவத்தினான் மிக்கார் போற்றும் கம்பியா ருரரென்ற* நாமமுஞ் சாத்தி மிக்க - ஐம்படை சதங்கை சாத்தி யணிமணிச் சுட்டி சாத்திச் செம்பொனா ணரையின் மின்னத் தெருவிற் றேருருட்டு நாளில்" *(பா-ம்) பொருள் பொருந்துவது அன்று. ாளில்' 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/46&oldid=852783" இலிருந்து மீள்விக்கப்பட்டது