பக்கம்:மணிவாசகர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை திரிசிரபுரம், பெருஞ்சொல்விளக்கனார், முதுபெரும்புலவர் திரு. அ. மு. சரவண முதலியார் அவர்தம் மகன், பேராசிரியர் அ ச ஞானசம்பந்தன் இருவரும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். முதல் ஐத்து அத்தியாயங்களில் திரு. அ. மு. சரவண முதலியார் முப்பதுகளில் ஆற்றிய சொற்பொழிவுக் கருத் துகள் தரப்பட்டுள. ஆறாம் ஏழாம் எட்டாம் அத்தியாயங்களில் திரு. அ. ச ஞானசம்பந்தன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகள் தரப்பட்டுள. தந்தையும் மகனுமாக இந்த நூற்றாண்டுத் தொடக்கம் முதல் ஆற்றிய ஆராய்ச்சிப் பணிகள் பல்வேறு படிமங்களை விட்டுச் சென்றுள புதிய பரிணாமங்களை ஏற்படுத்தியுள சைவமும் தமிழும் புதிய பார்வைக்கு உள்ளாயின. இந்த நூலைப் பதிப்பிக்குமாறு தந்து பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் எம்மைப் பெருமைப்படுத்தி உள்ளார்கள். அவர்கட்கு நாம் என்றென்றும் நன்றி உடை யோம். மறவன் புலவு மு. கணபதிப்பிள்ளை சாவகச்சேரி 15-12-1992

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/5&oldid=852787" இலிருந்து மீள்விக்கப்பட்டது