பக்கம்:மணிவாசகர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியோர்களின் இயல்பு என்பது. இவ்வுண்மையை அவர் கள் அருளிச் செய்த நூல்களிற் பரக்கக் காணலாம். உலகினரிற் பெரும்பாலோர் மேற்கொண்டொழுகும் இல்லறத்திற்கு மங்கலமாகிய மாண்பமைந்த மனைக் கிழத்தியும், அதன் நன்கலமாகிய நன்மக்களும் தாம் வேண்டு வன வற்றைப் பெறுதற்கு மேற்கொண்டொழுகும் பலவழி களில் அழுதல் ஒரு தலைசிறந்த வழியன்றோ? ஒரு மகவு தாய்வயிற்றினின்றும் வெளிவந்தவுடனே அழுகின்றது. சிறிது நேரம் அழாமலிருப்பின் அது அழுதற்கு வேண்டிய உபாயங்களாகிய திடுக்குத்தண்ணிர் தெளித்தல் தொப்பூழ்க் கொடியை நெருப்பில் வாட்டுதல் முதலியன செய்யப்படு கின்றன. இன்னும், பார்த்து மகிழ்ச்சிகொள்ள வருகின்றவர் 'களும் குழந்தை அழுகின்றதா?’ என்று கேட்பார்கள் 'இல்லை என்றால் உடனே தாங்கள் அழத்தலைப்படுவார் கள். 'அழுகிறது என்றால் மகிழ்வார்கள். இதனை நோக்க அது பிறந்தவுடனே அழுதல் இந்நிலவுலகில் உயிரோடு சின்னாள் வாழ்தற்கு ஒர் சாதனமாயிருக்கின்றது என்பது விளங்குகின்றது. இன்னும் அது பசித்துன்பம் வந்த பொழுதெல்லாம் அழுதலைக் காண்கின்றோம். உடனே அன்புடைய அன்னை ஓடிவந்து வாரி எடுத்து மடியின் மீதி ருத்தி, "என் கண்ணே அழாதே என்று இன்மொழி கூறி. பால் அருத்துகின்றாள். எத்துணை அன்புடைய, அறி வுடைய தாயும் சேய் அழுதற்கு முன்னே பால் ஊட்டுவ தில்லை. ஏனெனில், பசித்தாற் குழந்தை அழும்; அழிா திருப்பதினால் பசிக்கவில்லை போலும்; பசி இல்லாதபோது பால் ஊட்டினால் உடல் நலங்குறையும் எனக்கருதி: இதனாலன்றோ அழு த பிள்ளைதான் பால் குடிக்கும்’ என் நமது நாட்டில் ஒரு பழமொழியும் வழங்குவதாயிற்று. இன் லும், ஒரு பொருளைப் பெற விரும்பியவன் அதனைப் பெற முயலாமலும், பிறரைக் கேளாமலும் மடிந்திருந்து, அதனை அங்ங்னஞ் செய்து பெற்றவனைக் கண்டு பொறாமைப் படுங்காலை, வேறொருவன் அவனை நோக்கி, அவன் 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/50&oldid=852788" இலிருந்து மீள்விக்கப்பட்டது