பக்கம்:மணிவாசகர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோம்பியிருந்ததையும், மற்றவன் மடியாது அதனைப் பெற். றதையுங் குறித்தற் பொருட்டு 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் எனக் கூறவுங் கேட்கின்றோம். இதனால் ஒரு குழந்தை தனக்கு வேண்டுவதாகிய இன்றிமையாத பாலுண வையும் அழுதலாகிய வழியினாலே பெற்றுக் கொள்ளு. கின்றது என்பது விளங்கும். இன்னும் அது பாலுணவு வேண்டாத பருவத்திற்கூட, தனக்கு வேண்டிய உணவுப் பொருளோ, அல்லது காட்சிப் பொருளோ தன் அருமைத் தந்தையாரிடங் கேட்டு, அதற்கு இயலாவிடின் அழுது பெறு வதைக் காண்கின்றோம். இனி, இல்லக்கிழத்தியருட் பலர் தம் காதலரிடத்துத் தமக்கு வேண்டிய பொருளைக் கேட்பார்கள். அவர்கள் மறுத்துரைப்பின், நகரங்களிலுள்ள நீர்க்குழாய்கள், மேலே யுள்ள கைப்பிடியை ஒருமுறை திருப்பினால் நீரை ஊற்று வதுபோலத் தம் வலதுகையை முட்டியாகப் பிடித்துக் கொண்டு, வலக்கண்ணில் வைத்து ஒருமுறை சுழற்றி இரண்டு கண்களினின்றும் தாரை தாரையாக நீரைப் பெருக்கி அழுகின்ற வழியினால் தாம் கருதிய பொருளைப் பெறுதலைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். - இங்ங்ணம் உயிர்ச்சார்பாயுள்ள பொருள்களுட் சிறந்த மனைவியும் மக்களும் அழுதலைச் சாதனமாகக் கொண்டு விரும்பிய பொருளைத் தம் தலைவரிடத்துப் பெறுகின்றார் க்ளெனின், உயிர்கள் தம் இனிய உயிர்த்தலைவனாகிய பசு பதியை நோக்கி அழுதால் அவை விரும்பியவற்றை அவன் அளித்தருளுவானென்பதில் ஐயம் யாதுளது? இனி, நாம் ஒரு பொருளைப் பெறவிரும்பி அதனைப் பெறும் பொருட்டு யாரிடத்து அழுகின்றோமோ, அவர் மக்கள் தலைவராயிருப்பின் பேரருளுடையரல்லராகலின் நமக்கு இரங்கி அதனைக் கொடுத்தற்கு இசையார். ஒரோ வழிச் சிறிது இரக்கமுடையவராயிருந்து அதனைக் கொடுக் கக் கருதினும் அவர் எல்லாமுடையவரல்ல ராகலின் அப் 5 1 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/51&oldid=852789" இலிருந்து மீள்விக்கப்பட்டது