பக்கம்:மணிவாசகர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விம்மி அழுத மகவு யார்? காழிக்கன்றன்றோ? கழுமலக் கண்ணன்றோ? வேணு புர வேந்தன்றோ! வெங்குறு விர் க்ன்றோ புகலிப் புண்ணியமன்றோ புறவி நன்றவன்றோ! பூந்தராய்ப் புகழல்லவா! சிரபுரச் செம்மலல்லவா! சண்பைத் தவமல்லவா! கொச்சைவயக் குழகல்லவா! பிரம புரப்பிள்ளை வல்லவா! தோணிபுரத் தோன்றலல்லவா இங்ங்னம் அழுது அம்மையப்பரால் எண்ணரிய சிவ ஞானத்தின்னமு. தங் குழைத்து ஊட்டப் பெற்றதன் பயனாக, ஆறதேறுஞ் சடையானருள் மேவ அவனியர்க்கு விறதேறுந் தமிழால் வழிகண்டவ" ராகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையாரின் திருச்செயல் கனை அறியாதவன் தமிழ் மகனாவனோ? அவரைப் போற். றாதவன் சைவனாவனோ? ஆகான்! ஆகான்!! ஆகான்!!! இங்கனம் தம்முடல் தந்தையையுந் தாயையும் நோக்கிப் பாலுக்குங் காட்சிப்பொருளுக்கும் அழப்பெறுங் குழவிப் பரு. வத்திலேயே உயிர் தந்தையாகிய இறைவனையும், இன்னு: யிர் தாயாகிய இறைவியையும் ஒரு நெறிய மனம் வைத்து, நோக்கி, அழுது அழைத்து, உலகை வாழ்வித்தமையினர் லன்றோ காலம் பெற அழுதார் என்றும், விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண்டவர்' என்றும், "அழுதுவகை வாழ்வித்தார் என்றும் சேக்கிழார் பெருந்தகை, யாரால் நமது ஆளுடைய பிள்ளையார் பாராட்டப் இபற்றார். இனி, ஆண்டவன் அடிப்பேற்றுக்கு அழுதல் ஒரு வழி எனத் திருவாசகத்தில் யாண்டுக் கூறப்பட்டிருக்கின்றதென் பதை ஆராய்வோம். - யானேபொய் என்னெஞ்சும்பொய் என்னன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதாலுன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கு மானே அருளா டியேனுனை வந்துறு மாறே' (திருச்சதகம்-90)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/53&oldid=852791" இலிருந்து மீள்விக்கப்பட்டது