பக்கம்:மணிவாசகர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுந் திருப்பாட்டினால் 'யான்' என்னுள்ளம், அதனை இடமாகக் கொண்டு திகழும் அன்பு ஆகிய இவ்வனைத்தும் பொய்; ஆனாலும் தீவினையேனாகிய யான் அழுதேனா னால் உன்னையடையலாம் என நமது அடிகள் கூறியருளி -னமை காண்க. - . . " இனி, பெருந்துன்பமுடையாரும் நோய்கொண்டாரு மன்றோ பொறுக்கலாற்றாது அழுவர். இப்பெரியார் ஏன் அழ வேண்டுமெனின், கூறுதும், 2. அழுதலின் காரணமென்னை? பரந்த நிலவுலகின் கண் காணப்படும் உயிர்களனைத்தும் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையுமே அவாவி நிற் கின்றன வென்பது கண்கூடு. அங்ஙனம் அவாவுகின்ற முறையில், அவற்றால் துன்பமெனப்படுவனவும், இன்ப மென எண்ணப்படுவனவும், அவற்றை முறையே போக்கவும் ஆக்கவும் சூழும் நெறிகளும் அவற்றின் அறிவு வேறுபாட்டுக்கேற்பப் பலதிறப்படும். எனினும் அவற்றின் குறிக்கோள் துன்பம் நீங்குதலிலும், இன்பம் ஒங்குதலிலு மென்பது மறுக்க முடியாததொரு உண்மையாகும். - இனி, அவ்வின்ப துன்பங்களை உள்ளவாறு உணர்வதில் ஏனைய உயிர்களினும் மக்களே தலைசிறந்தவராவர். என்னை? பகுத்தறிவுடையராகலின் என்க. ஆயின் மக்கட் பிறப்பினரனைவரும் அவற்றைப் பிறழாது உணர்தற்கு வல்லுநராவரோ எனின், ஆகாரென்க: என்னை மக்களி லும் மாக்களுண்டாகலின். அற்றேல், அவர் யார்? கல்லாத வர் என்க: என்னை? - - . "விலங்கொடு மக்கள் அனைய ரிலங்குநூல் 'கற்றாரோ டேனை யவர்" என்பது பொய்யா மொழியாகலின் என்க. ஈண்டு விலங்கின் மக்கட்கேற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிற்ப்பின ரல்ல ரென்பதாம் என்னும் பரிமேலழகருரையும் காண்க. $4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/54&oldid=852792" இலிருந்து மீள்விக்கப்பட்டது