பக்கம்:மணிவாசகர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, சமய வுணர்ச்சி அல்லது "கடவுள் கொள்கை' என்பது மக்களிடம் அரும்பியது எங்ங்னமென ஆராய்' வோம். - இவ்வுணர்ச்சியானது மக்களிடம், அவர் முதன் முதல் தோன்றிய காலத்தே உண்டாயிருக்குமென்றாதல், ஆராய்ச் சியற்ற சில நம்பிக்கைகளைக் கொண்டு பிறவழியால் உண் டாயிற்றென்றாதல் கொள்ளின் அது இயற்கையோடு பொருந்தாததுடன், அறிவுடன் கூடிய ஆராய்ச்சி உலகத் தால் ஏற்றுக்கொள்ளப் பெறாததுமாகும். ஆயின் இது எப். பொழுது உண்டாயிருக்கலாமெனக் கூர்ந்து ஆராயின், மக்கள் தோன்றிய பன்னெடுங் காலங்கட்குப் பின்னரே' தோன்றியிருத்தல் வேண்டும். எங்ங்னமெனின், அவர்கள் தோன்றிப் பன்னாள்வரையும் தங்கட்கு இயல்பாகவுள்ள பசிப்பிணி முதலியவற்றைப் போக்க முயன்று நேர்ந்த உணவு முதலியவற்றை நுகர்ந்து பின் அறிவு சிறிது வளர இருத்தற்கு எழில்பெறும் இடமும், உண்ணு தற்கு அண்ணிக் கும் உணவும், உடுத்தற்கு உயரிய உடையும், படுத்தற்குச் சீரிய பாயலும் பெற்றுத் துய்த்திருப்பார்கள். பின் அவர்கள் 'ஆராவியற்கை அவா. உடையவராகலின் தாம் அரிது முயன்று பெற்ற பொருளில் வைத்த விருப்பத்தை நீக்கிப் பெறாத பொருள் அதனினும் எளிதாயினும் அதில் விருப் பத்தைப் போக்கி அதனைப் பெறுதற்கு முயன்றிருப்பார்கள்: இவ்விரண்டு தன்மையும் மக்களின் இயற்கை யென்பது யாவருமறிந்ததொன்று. . - சாந்தலிங்க அடிகள் என்னும் பெரியார் தாமியற்றி யுருளிய வைராக்கிய தீபம்' என்னும் நூலின்கண் இவ். வுண்மையை, . - - யாவர்க்கும் கிடைத்தற்கரிய பொருளைப் பெற்ற காலத்தும் தாம் பெற்ற அப்பொருளை எளிதாகக் கருதி அதன்கண் விருப்பமற்றுப் பெறாதனவாகிய பொருள்கள் எளியவாயினும் அவற்றை அரியவாகக் கருதி விரும்பா số

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/56&oldid=852794" இலிருந்து மீள்விக்கப்பட்டது