பக்கம்:மணிவாசகர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்ற உயிர்கள், தாம் முன்னர் அடையாத செல்வமாகச் சொல்லப்பட்ட நின்மலமாய்த் தமக்கு உரிய ஞானானந்த மாய், அழியாததாய், ஒப்பற்றவீடு உண்டென்று கேட்டிருந் தும் அதன்கண் விருப்பமற்று முன்னர்த் தாம் அடைந்ததாய் அசுத்தமாய்த் துக்கமாய் அநித்தமாயுள்ள பொல்லாத பிறவி யையே இன்ன்மும் அடைய விரும்புதற்குக் காரணம் என்னையோ? யாம் அறியோம்! என்னும் பொருளை, அரிதுபெற்றிடினும் பெற்றதின் விருப்ப மறப்பெறர் * . * * * தனவிரும் புயிர்கள் தெரிய கிற் கிலமீ தெனைமுன மடையாச் செல்வமாய்ச்." - - சொல்பவித் திரமாய் உரியசிற் சுகமாய் கித்தமா யொருவி டுளதெனக் - . கேட்டுமற் றதனிற் பிரியமற் றினமு முனமுறும் பொல்லாப் பிறவியே - >

பெறவிரும் புதலே' என்னுஞ்

செய்யுளால் விளக்கியருளினார். அங்ங்னம் முயன்று அம் முயற்சி பழுதுபடு மாற்றையும், அப்பொருள் தமக்குக் கிடைக்காததையும், ஒரோவழிக் கிடைப்பினும் தாங்கருதிய அளவில்லாததையும், சில பொருள்கள் தாம் வேண்ட்ாத காலத்து வந்து மேவுதலையுங் கண்டு ஈதென்ன வியப்பு அப் பொருளை யாம் விரும்பினேம்; அது கிடைக்கவில்லை. இப் பொருளை யாம் எண்ணவில்லை; எனினும், அது தானே வந்தெய்தியது. உப்பொருள் யாம் வேண்டியவாறே.கிடைப் பினும், அது நாங்கருதிய வளவிலில்லை. இங்ங்ணமே நாம் முயலும் செயல்களனைத்தும் மாறுபடுகின்றன. இதற்குக் கர்ரணம் என்னை? இங்ங்னம் ஆகாத அலுவல்களில் முயலும் யாம் யார்? அவற்றை ஆகவொட்டாமற்றடுப்ப் வர், அல்லது தடுப்பது. யார்? அல்லது எது? அவ்வாறு தடுப்பவரையோ, அல்லது தடுப்பதனையோ யாம் அறிந் தி கொள்ள முடியாமல் மறைப்பது எது? யாம் முன்ன்ே ஆங்கிருந்தோம்: எப்படியிருந்தோம்? இப்பொழுது எங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/57&oldid=852795" இலிருந்து மீள்விக்கப்பட்டது