பக்கம்:மணிவாசகர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாகிய ஒருபொருள் உண்டென்னும் பொதுவுணர்ச்சி உண். டாகப்பெற்று, அதன்பின் பன்னூறாண்டுகள் கடந்தே அப் பொருளையும் பிறவற்றையும் சிறப்பாக அறிந்திருப்பார் கள். மணிவாசகப் பெருந்தகை யென்னும் அழுதடி யடைந்த அன்பர் இம்முறையை, • * . . . "தெய்வ மென்பதோர் சித்த முண்டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும்' என விளக்கி யருளினமை காண்க. இனி, மேற்காட்டியவற்றால் உயிர்களனைத்தும் துன்பம் அறவும், இன்பம் பெறவுமே அவாவுமென்பதும். அவற்றுள், பிறப்பான் மக்களாயும் செயலான் மாக்களாயு மில்லாத மக்களுயிரே துன்ப இன்பங்கள் முதலியவற்றை உள்ளவாறு உணருமென்பதும் பெற்றாம்; பெறவே அவர் பிறழாது உணர்ந்த துன்பம் எதுவென அறிந்து கோடலே சண்டைக்குப் போதியது, - துன்பம் என்பது. கடவுள் தன் படைப்பு நோக்கம். முற்றுதற் பொருட்டு உயிர்கட்கு வைத்த ஒரு பெருநிதி யாகும். அஃதொன்று இல்லையேல் எவ்வுயிர்களும் இறை வனை நினையா. கடவுள் இல்லையென்று துணிந்த மன் வலியும், உடல்வலியுமுடைய ஒருவனும் தன் வலிமைக்கு மேற்பட்டநோய் முதலிய துன்பம் வரின் கடவுளை, நினைந்து கதறக் காண்கிறோம், செல்வர்கட்குத் துன்ப முண்டாதல் அரிதாகலின் அவர்கட்கு ஆண்டவன் திருவடிப் பேறு கிடைத்தல் எளிதன்று என்னுங் கருத்துப் பற்றி" யன்றே பிறநாட்டுப் பெரியார் ஒருவர் ஒட்டகம் ஊசியின்’ காதில் நுழையினும் செல்வர்கட்கு வீடுபேறு கிட்டாது' என மக்கட்கு அறிவுறுத்துவாராயினர். } , ... . . . துன்பங்கள் தன்னைப்பற்றி வருவனவும், பிறவுயிரைப் பற்றி வருவனவும், தெய்வத்தால் வருவனவுமாக அளவின்றி. விரிந்து கிடக்கின்ற வாகலின் அவற்றை விடுத்து அவையி: னைத்திற்கும் மூலகாரணமாகவுள்ள துன்பம் எதுவென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/61&oldid=852800" இலிருந்து மீள்விக்கப்பட்டது