பக்கம்:மணிவாசகர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்த்து அது பிறவியே எனக் கண்டனர் அப்பெரியோர். என்னை? பிறவி இன்றேல் அதுகாரணமாக வரும் அவ்: வகைத் துன்பமுமில்லையாகலின். இவ்வுண்மையை, அல்லற் பிறவி யறுப்பானே' என்று மாணிக்க வாசகனாரும், 'பொன்னை வகுத்தன்ன மேனியனே புணர்மென் முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய் புன்னை மலர்த்தலை வண்டுறங்கும் புகலூ ரரசே என்னை வகுத்திலையே லிடும்பைக்கிடம் யாது:சொல்லே' எனவும், 'பிறத்தலும் பிறந்தாற் பிணிப்பட வாய்ந்தசைந்துடலம் - புகுந்துகின் இறக்குமாறுளதே யிழித்தேன் பிறப்பினைகான்' எனவும் திருநின்ற செம்மைத் திருநாவுக்கரசரும், நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை' எனத் தோணிபுரத்தோன்றலாகிய திருஞானசம்பந்தரும், "தோற்றமுண்டேல் மரணமுண்டு துயரமனை வாழ்க்கை' எனவும், "இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழை மனைவாழ்க்கை' எனவும் நாவலூர் நம்பியும் அருளி விளக்கினமை காண்க. இன்னும் நாம் இப்பிறப்புத்துன்பத்திற் கிடந்து நையா வகை கூறிய பொய்யா மொழியாரும், இப்பிறப்பிற்குக் காரணமும், பிறப்பின் தன்மையுங் கூறுவார், பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு' என அருளிச்செய்தார். சொற்களை நிறுத்து உரை எழுதிய பரிமேலழகரும், 'மாணாப்பிறப்பு-இன்பமில்லாத பிறப்பு என உரையெழுதி, விளக்கவுரையில், நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினு. 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/62&oldid=852801" இலிருந்து மீள்விக்கப்பட்டது