பக்கம்:மணிவாசகர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிறந் தோருறுவது பெருகிய gຄໍrມນ່” எனவும், - "வினையின் வந்தது வினைக்கு விளைவாயது' எனவும், மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச்சாத்தனா: ரென்னும் சீரிய புலவரும் விளக்கினமை காண்க. இன்னும் இப்பிறவியானது நோய் துன்பஞ் செய்வது போலத் துன்பம் செய்தலின், இதனையே ஒரு பிணி' யென்றும் நோய்களனைத்தும் தோன்றுதற்கு இஃது ஒர் 'மூலமாயிருத்தலின் மூல நோய்' என்றும், ஏனைய நோய்கள் போலப் பல மருத்துவர்களாலும் நீக்கப்படாமை பற்றி இதனைத் தீரா நோய்' என்றும், இதனைத் தீர்க்க வல்ல இறைவனை மருத்து என்றும், வைத்தியநாதன்: என்றும் நமது முன்னோராகிய பெரியார் பலரும் மொழி குவாராயினர். அவற்றை அவரியற்றிய சாத்திரமுத் தோத்திரமு மாய நூல்களிற் பரக்கக் காணலாம். அவற்றுட் சில வருமாறு:- * . 'இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை - என்னினல்லால் விருந்தினனேனை விடுதிகண்டாய் மிக்க கஞ்சமுதா அருந்தினனே மன்னு:உத்தர கோச மங்கைக்கரசே மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.' தாதாய் மூவேழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப்பிணிக் கோர்மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் ஏதாமணியே என்றென்றேத்தி இரவும் பகலுமெழி - லார்பாதப் போதாய்க் தணைவதென்று கொலோ என்பொல்லா மணியைப் புணர்ந்தே." (திருவாசகம்) "மருந்து நம்மல்லற் பிறவிப்பிணிக்கு அம்பலத்தமிர்தாய் இருந்தனர்... ... ... ... ... ... ... ... ... 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/64&oldid=852803" இலிருந்து மீள்விக்கப்பட்டது