பக்கம்:மணிவாசகர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்ங்ணம் கொள்ளினும் அடிகள் அன்போடு கூடிய அழுகை யால் ஆண்டவன் அடியை அடையலாம் எனக் கருதினா ரென்றும், 'அன்பின்றி அழுகின்ற எற்கு எங்ங்னம் அத்திரு வடிப்பேறு வாய்க்கும்? எனக் கருதினாரென்றுங் கொள்ளப் புட்டு, ஆண்டவனடிப்பேற்றுக்கு அழுதல் ஒரு சாதனம் என் பதும், அழுதனா என்பதும் வலியுறுத்தப் படுவதால் முடிவில் வேறுபாடின்மையைக் கூர்ந்துணர்க. அவர் தமக்கு அன்பில்லை எனக் கூறியருளியதன் கார ணத்தை மேல்வரும் அன்பர்’ என்ற பகுதியில் விளங்கக் காண்க, இன்னும், இந்நூலின் தொடக்கத்தில் அடிகள் வாசமா கக் காட்டப்பட்ட புழுவினால் என்று தொடங்குந் திருப் பாட்டில், உள்ள "தொழுதகையின ராகித்துய் மலர்க்கண் கள்கீர் மல்கு தொண்டர்க்கு வழுவிலா மலர்ச்சேவடி" என்னுந் தொடரால் அழுபவர்க்கு அடிப்பேறு தப்பாது’ ான அடிகள் அறுதியிட்டு அருளினமை காண்க. - . இச்சாதனமும் தனக்கு வாய்க்கவில்லையேயென அடிகள் புடைபடக் கவன்றமை திருச்சதகத்திலுள்ள. ஆராயடியே னயலே மயல் கொண்டழுகேனே' "அழுகினின்பா லன்பாமனமாய்' என்னும் அடிகளால் நன்கு விளங்குவதாகும். இனி, அன்பர் அழுதமையைக் குறிக்கும் அழகிய ஆதரவு ஒன்று வருமாறு:- . . . . 'முழுமுதலே ஐம்புலனுக்கு மூவர்க்கும் என்றனக்கும் வழிமுதலே கின்பழவடி யார்திரள் வான்குழுமிக் கெழுமுதலே அருள்தர் திருக்க இரங்குங்கொல் - லோவென்று 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/74&oldid=852814" இலிருந்து மீள்விக்கப்பட்டது