பக்கம்:மணிவாசகர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுமதுவே அன்றிமற்றென் செய்கேன் பொன்னம்பலத்தரைசே' |கோயில்மூத்த திருப்பதிகம்-4) அறிவுடைய செல்வக்குழந்தை ஒன்று இடையறாது அழா நிற்க, அவ்வருந்தவமகவின் அத்தனும் அம்மையும் அதை வாரியெடுத்து, முத்தமிட்டு, 'என் கண்ணே ஒயாது அழுகின்றாயே ஏன்' என்று கேட்பார்களாயின், அவ்வரும் பொருள். நீங்கள் தாம் யாம் கேட்டதைத் தரவில்லையே, யான் அழாமல் என் செய்வேன்’ எனக் கூறுவதை நினை வில் வைத்துக் கொண்டு பார்ப்போமானால், நமது அடிகள் இடையறாது அழாநிற்க அதனையறிந்த அம்பலத்தரசு பொறுக்கலாற்றாது ஏன் ஓயாது அழுகின்றாய் எனக்கேட் டது போலவும் அதற்குவிடையாக, அழும் அதுவேயன்றி மற்று என்செய்கேன்பொன்னம்பலத்தரசே என அடிகள் கூறியருளியது போலவும் மேற்காட்டிய திருப்பாட்டின் ஈற்றடி அமைந்து கிடத்தல் காண்க. - இன்னும், நமது அன்பர்தாம் அழுங்காலை ஆண்டவன் கண்ணிரைத் துடைத்துப் போக்கியருளினனென்பதை, 'மலங்கினேன் கண்ணின் கீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை" எனக் கூறி விளக்கியருளினமையும் காண்க. இனி, அழுதல் ஒரு சாதனமா? என்ற பகுதியின் தொடக் கத்தில் உயிர்கள் எவ்வெச்சாதனங்களால் தாம் விரும்பிய வற்றை அடைகின்றனவோ அச்சாதனங்கள் ஆண்டவன் அடிப்பேற்றுக்கும் உரியனவாகுமெனப் பெரியோர் கருதின ரென்பதை அவரியற்றிய நூல்களிற் காணலாம் எனக் கூறினேம் அதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு: நகரங்கள் பலவற்றிலும் தூய்தல்லாத உடை முதலியன உடையாராய், வீதி முதலியவற்றைத் துப்புரவு செய்யுந் தொழிலை மேற் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு வகுப்பார் 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/75&oldid=852815" இலிருந்து மீள்விக்கப்பட்டது