பக்கம்:மணிவாசகர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளர். அவர்கள் ஆங்குள்ள வீடு ஒன்றில் மணவினையோ அன்றிப் பிணவினையோ எதுவாயினுங் கருதாராய் மக்கள் திரண்டிருப்பதைக் காணின் அங்குச் சென்று Ꮽa .ööᎢ" வின் பொருட்டு (இசைநூலுட் கூறப்படும் பன்னிரண்டு மாத்திரையினும் மிகுமாறு (ஓ) வென்று நீட்டி அம்மோ ஆயோ’ எனச்சிறிதும் ஓயாது கத்துவார்கள். அவ்வீட்டுத் தலைவர் சிறிது இரக்கமுடையவரானால் அலறுகின்றவர் களின் விருப்பம் எளிதில் நிறைவேறும். இன்றேல் அரிது முயல வேண்டியதுதான் முயற்சி என்னை? ஒவ்வொரு முறையும் ஒலியை உயர்த்தி மாத்திரையை மிகுத்து விளிப் பதுதான். இங்ங்னம் அவர்களால் உண்டாகும். அப்பே ரொலியானது அவ்வீட்டுத் திண்ணையில் மேற்காட்டிய இரு வினைகளில் எது நடந்தாலும் தாம் அதில் ஒரு சிறிதுந் தொடர்புகொள்ளாத மெய்ஞ்ஞானிகளாய், நன்றறி வாரி னும் திருவுடையராய்ச் சதுர்முக வேதபாராயணம் (சீட்டாட் டம்) செய்து கொண்டிருக்கும் இளைஞரும் முதியருமாகிய சிலர் நுகரும் இன்பத்திற்குப்பெரிதும்இடையூறாகஇருக்கும் உடனே அவருள் ஒருவர் வெளியே சென்று அச்சுறுத்து: வார்கள் அவர்கள் ஒரு சிறிதும் அதைப் பொருட்படுத்தாது. தாம் மேற் கொண்ட உரத்துக் கூப்பிடுதலாகிய தொழிலின் கண்ணே கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். நால்வகை உபாயங்களுள் கொடுத்தலென்பது ஒழிய மற்ற மூவகையுள் எதைச் செய்யினும் போகார். இன்னும் நான்காவதாகிய ஒறுத்தல் நடந்துவிட்டால் அவர்கள் வேண்டுவது எளிதில் முடிவதுடன் எதிர்பார்த்ததினும் மிகுதியாகவே முடியும். பின் வெளியே வந்து அவ்வுபாயங்களைச் செய்து பார்த்த அவர் உள்ளே சென்று அவ்வீட்டுத் தலைவரிடம் அவர்கட்கு உணவுகொடுத்துப் போகச் சொல்லுகின்றீர்களா? அல்லது யாங்க்ள் வேறிடத்திற்குச் செல்லவேண்டுமா? எனச் சினக் குறியுடன் வினவுவார். உடனே அவர் வெளியிலுள்ள ஆட வரும் மகளிருமாகிய அக்குழுவினருக்கு வேண்டிய உணவைக் கொடுத்துப் போக்குவர். இங்கு அவர்கள் எச்சாதனத்தால் தாங்கள் விரும்பியதைப் பெற்றனர்? அவர்கள் உணவு பெற். 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/76&oldid=852816" இலிருந்து மீள்விக்கப்பட்டது