பக்கம்:மணிவாசகர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைத் தன்னடி யானென் றறிதலும் தன்னை யானும் பிரானென் றறிந்தேனே' என விளக்கிப் போந்தமை காண்க. இனி, வண்டியிலும், நடந்தும் வழிச்செல்லுவோரை ஒருவகுப்பாரின் சிறுவர் சிலர் 'ஐயா ஐயா என்று வயிற்றி லடித்துக் கொண்டு, காவத துாரமேனும் பின்றொடர்ந்து ஓடி அவர் போக்கைத் தடைப்படுத்தி எத்துணை உலோபி யாக இருப்பினும் அவரி!-ஞ் சிறுபொருள் பெற்று மீளுதலா கிய நிகழ்ச்சியை நினைவில் வைத்துக் கொண்டு, 'வணங்கியாம் விடேங்களென வந்து கின்றருளுதற் கிணங்கு கொங்கை மங்கைபாக என்கொலோ - - நினைப்பதே" எனக் கூறும் அடிகளின் திருவாசகத்தையும், பன்னாட்களாக எத்திக்கொண்டு திரியும் ஒருவன் அகப் பட்ட ஞான்று எத்தப்பட்டவன் இறுகப்பிடித்துக் கொண்டு "எங்கே இனி போய்விடு பார்ப்போம் எனக் கூறும் உலக நிகழ்ச்சியை நினைவில் வைத்துக்கொண்டு, "எத்தனே யுன்னைச்சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுக் தருளுவதினியே' என்னும் மணிவாசகத்தையும், "முளைத்த வெண்பிறை மொய்சடையுடையா யெப்போதும் என்னெஞ்சிடங் கொள்ள, - வளைத்துக் கொண்டிருந்தேன் வலிசெய்து - - போகவொட்டேன்’ என்னும் அப்பர்பெருமான் அமிர்தமொழியையும் உன்னி யுன்னி மகிழ்க. - மேலே காட்டப்பட்ட திருவாசக ஆதரவுகளினால் ஆண்டவன் அடிப்பேற்றுக்கு அழுதல் ஒருசாதனம் என்பதும் அதுதானும் தமக்குச் சித்திக்க வில்லையே என அடிகள் வருந்தினரென்பதும், அழுபவர்க்கு அவ்வடிப்பேறு தப்பா தென்பதும், அதன்ை மேற்கொண்டு அடிகள் ஒழுகினா ரென்பதும், பிறவும் பெறப்பட்டன. 78 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/78&oldid=852819" இலிருந்து மீள்விக்கப்பட்டது