பக்கம்:மணிவாசகர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என ஈற்றடி கூறியருளினமையும், அப்பதிகமுழுதும் ஈற்றடி யில் அடிக்கே போதுகின்றேன்' என அருளிச்செய்தமை புங் காண்க. இன்னும் இப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாட்டின் இறுதியடியாகிய, 'பொய்யுரைக்கா துன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' என்பதும் மேலே காட்டிய மணிவாசகமாகிய, "போவோங்காலல் வந்ததுகாண் பொய் விட்டுடையான் கழல் புகவே' என்பதும் ஒத்திருத்தலை ஒர்க. இனி ஆளுடைய பிள்ளையாரும் திருவாழ்கொளிப் புத்துார் (பண்-தக்கராகம்) பதிகத்தின் ஈற்றடி அனைத்தி னும் அடிசேர்வோம்’ என இவ்வுண்மையை விளக்கியருளி னர். திருவடி யே சிவ மாவது தேரில் திருவடி யே சிவலோகஞ்சிங் திக்கில், திருவடி யேசெல் கதியது. செப்பில் திருவடி யேதஞ்சம் உட்டெளி வார்க்கே" என்பது திருமந்திரம். மக்கட் பிறப்பினர் அடைய வேண்டிய பயன் கடவுள் கழல் சேர்தல் (வீடுபேறு) தான் என்பதைச் சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத் தந்தாதி'யில்,

படிறாயின சொல்லிப்பாழுடலோம்பிப் பலகடைச் சென்று

இடறா தொழிதும் எழுநெஞ்சமே எரியாடி யெம்மான் கடறாயின நஞ்ச முண்டபிரான் கழல் சேர்தல் கண்டாய் உடறானுள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே” 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/80&oldid=852823" இலிருந்து மீள்விக்கப்பட்டது