பக்கம்:மணிவாசகர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக் கூறி விளக்கியருளினர். இன்னும், திருமுருகாற்றுப் படையில் சேவடி படரும்' என்ற விடத்து, 'திருவடியே வீடாயிருக்கு மென்றார்; அது, "தென்னன் பெருந்துறையான்... * - c. *_ _ _ - - - - - - காட்டாதனவெல்லாங் காட்டிச்சிவங் காட்டித் தாட்டாமர்ை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி’ என்பதனானும், பிறருந்திருவடியைக் கூறுமாற்றானும் உணர்க' என்ற நச்சினார்க்கினியர் உரையும் இதனை வலியுறுத்தல் காண்க. அவர் மேற்கோளாகக் காட்டிய திருப்பாட்டும் திரு வாசகமென்பது கருதற்பாலது. இனி, நமது அடிகள் இறைவன் திருவடியின்கண் வைத்த பற்று முதலியவற்றையும் அதனை அடைந்ததையும் திருவாசகத்திற் கிடைக்கும் ஆதரவுகளைக் கொண்டு ஆராய் வோம். திருவாசகத் தொடக்கத்திலேயே, 'நமச்சிவாய வாழ்க தாதன்றாள் வாழ்க’ எனப் பெருமான் திருவடி பேசப்படு கின்றது. இங்ங்ணம் தொடக்கத்திலேயே அன்பர் ஆண்டவ னுடைய திருவைந்தெழுத்தையும் திருவடியையும் வாழ்த்தி யதற்குக் காரணம் என்ன என்பதைச் சிறிது நோக்குவோ Łęsrås. அடிகள் தாம் பிறவியென்னும் பெருங்கடலில் வீழ்ந்து துன்பமென்னும் பேரலைகளால் எற்றப்பட்டு, பெண்களா கிய காற்றினாற் கலக்குண்டு காமமென்னும் சுறாமீனின் வாய்ப்பட்டு இனி எங்ங்னம் உய்வேன்' எனக் கலங்கிய ஞான்று. அஞ்செழுத்தாகிய புணை கிட்டியதாகவும் அது கொண்டு திருவடியாகிய கரையை அடைந்ததாகவும், 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/81&oldid=852824" இலிருந்து மீள்விக்கப்பட்டது