பக்கம்:மணிவாசகர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றுள் 1, 3, 4, 6, 9, 11, 14 எண்ணுள்ள தொடர் களும். என்பிறவி கெட்டின், றழிகின்ற தாக்கியதாள்' என்னுந் திருக்கோவையார்த் தொடரும் 'திருவடி காட்டிய பின்னே பிறவியற்றது' என மேலே காட்டியதனை விளக்கு தல் காண்க. இன்னும் அடிகள் தகுதியற்ற தம்மை ஆட்கொண்ட தனாற்றான் ஆண்டவன் திருவடி தன் அருட்டிறமையைக் காட்டிற்று என்னும் பொருள்பட, "அறவை யென்றடியார் தங்களருட்குழாம் புகவிட்டு 15ನು உறவு செய்தெனை உய்யக் கொண்டபிரான்தன்னுண் மைப்பெருக்கமாக் திறமைகாட்டிய சேவடி" எனக் கூறி, "அங் கனன்.அந்தணனாய் அறை கூவி வீடருளும். அங் கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய்' எனக்கூறி அதன் பேரருளை விளக்குகின்றார். அத்திரு வடிகளின் திருவருளை வியந்து கூறுமிடத்து, - "பெற்ற தாயின் தன்மைபோல்வது நின்தன்மை என் பேன். அதற்கேற்ப மகவு அழுங்காலத்து இன்றியமையாப் பணியில் ஈடுபட்டிருக்குந் தாய் வருதற்குச் சிறிது காலந் தாழ்ப்பதுபோல, நீயும் யான் அழுதால் வராமலிருப்பாய்; ஆனால், உன் திருவடிகள் அவ்வழுதலைப் பொறாவாய் வந்து எற்கு அருள் செய்யும்' என்ற பொருளையமைத்து, "பெற்றிடுதாய் போல்வதுகின் பெற்றி யென்பேன் பிள்ளையது, மற்றழுதரற் கேட்டும் வாராதங்கே-சற்றிருக்கப், பெற்றாள் பொறுப்பள் பிரானி பொறுக்கினுகின் பொற்றாள். பொறா வென் புலம்பு' என இராமலிங்க அடிகள் அருளியது கருதி மகிழத்தக்கது. 97.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/87&oldid=852830" இலிருந்து மீள்விக்கப்பட்டது