பக்கம்:மணிவாசகர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, நமது மணிவாசகனார், திருவாசக இறுதியிலுள்ள அச்சோப்பத்தில் தையலிடங் கொண்டபி ரான் றன்கழலே சேரும் வண்ணம் ஐயனெனக் கருளியவா றார்பெறுவாரச்சோவே" எனவும், மாதொருகூ றுடையபிரான் றன்கழலே சேரும்வண்ணம், ஆதியெனக் கருளியவா றார்பெறுவாரச்சோவே" எனவுங் கூறிய வாற்றால் அடியடைந்தமை புலனாதல் காண்க, - இனி, அடியடைந்தாரா? என்னும் பகுதியின் தொடக் கத்தில், அடியார்களனைவரும், ஆண்டவன் திருவடிப்பேறு ஒன்றையே கருதி நிற்பர் எனக் கூறினோம். அதற்கு எடுத் துக்காட்டுக்கள் பல; அவற்றுள் ஆண்டவனிடத்தில் அப் பேற்றினை நயம்பட வேண்டிக் கொண்ட பெரியார் சிலர் திருவாக்குகளிற் சிலவற்றை மட்டும் இங்குத் தருகின்றோம். தலைவன் ஒருவனிடத்தில் பேச்சில் வல்ல அடிமை ஒரு வன் தன் இருக்கைக்கு இடம் வேண்டுமென்று கேட்பானா யின், தலைவ! இப்போது அடியேன் ஒரு சிறு குடிலில் இருக்கின்றேன்; இது பிரிந்துவிடின், இந்த நாய்க்குட்டிக் குத் தங்கள் காலடியில் ஒரு தலைமறையும், இடங் கொடுத் தாற் போதும்; அதற்கு அருள் செய்ய வேண்டும்'என் வேண் டுவதை உலகியலிற் காண்கிறோம். இம்முறையில் நமது" அப்பர் பெருமான் ஆண்டவன் அருட்கழலை வேண்டுவது கண்டு மகிழற்பாலது. அது, * - முருகார் நறுமலரிண்டை தழுவிவண் டேமுரலும் பெருகாரடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த இருகாற் குரம்பை யிதுகானுடையதிது பிரிந்தால் தருவா யெனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைவே" என்பது, –6 क्लT

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/89&oldid=852832" இலிருந்து மீள்விக்கப்பட்டது