பக்கம்:மணிவாசகர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபர அடிகளென்பார் கூத்தப் பெருமானை நோக்கிக் கேட்கும் வரமொன்றில் ஏனையவையெல்லாம் வேண்டாம் என்றும், தம் உடல் விடும் வரையும் அடியார் குழாத்துடனேயே தாமி ருக்க வேண்டுமென்றும், இறுதியில் நின் திருவடியைக் கொடுக்கவேண்டுமென்றும், இப்பொழுது தாம் கேட்பதே உறுதியான மொழியென்றும், பின் தாம் எப்பதவியை விரும்பி இரந்து கேட்பினும் மறுத்துத் திருவடி யையே தரல் வேண்டுமென்றும் வேண்டுகின்றனரென்பதை அவரருளிய சிதம்பர மும்மணிக்கோவையில் உள்ள, வரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும்; அதுவே, பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி பலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது பிறிதொன்று கிடையாதாக வறுமனைக் கடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்கு இடம்பிறி திலலை யாகக் கடும்பசிக் குப்பின் றட்ட புற்கையூ ணல்லது மற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும் ஈகு ரில்லை யாகநா ணாளும் ஒழுக்க கிறைந்த விழுப்பெருங் கேள்வி மெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம் உடனிங் களவு முதலிக் கடவுணின் பெரும்பத மன்றியான் பிறிதொன் றிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே" என்னுஞ் செய்யுளால் அறிக. மேற்காட்டிய திருவாசக ஆதரவுகளினால் நமது அடி கள் ஆண்டவன் அடிப்பேறு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, இறுதியில் அதனையே அடைந்தமை வெள்ளிடை மலையென விளங்குதல் காண்க. - 4. அன்பர் இனி, அன்பர் என்றதைப்பற்றி ஆராய்வோம். பெரி யார் ஒவ்வொருவருக்கும் ஏற்றம் வருவது ஒவ்வொரு கார. 'నఫ్స్

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/90&oldid=852834" இலிருந்து மீள்விக்கப்பட்டது