பக்கம்:மணிவாசகர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றவிராதென்பது அறிஞர் கண்கூடாகக் காணும் உண் மையன்றோ? பெரியாராகிய காந்தியடிகளின், என் அநுபவத்திற்குக் கொண்டுவந்து நன்மை தீமையைப் பாராத எதனையும் யான் மக்களுக்குச் சொல்வ: தில்லை' என்னும் பொன் மொழி போற்றத்தக்க தன்றோ? 'கற்றுப் பிறர்க்குரைத்துத் தான் நில்லார் வாய்ப் படுஉம் வெற்றுரை' என்பது குமரகுருபர அடிகளின் திரு வாக்கன்றோ? அன்பின் ஊற்றுக்கு நிலைக்களனாகிய திரு. வாசகத்தின் பெருமையை அஃது அணுவுமில்லாத பேதை யாகிய யானோ எழுதவல்லுநன்; "பாம்பறியும் பாம்பின் கால்' என்பது போலப் புலவனைப் புலவன் அறிவான், அன்பனை அன்பன் அறிவான்,யோகியை யோகி அறிவான், ஞானியை ஞானி அறிவான், ஏனையோர் அறிந்தோ மென்பது பேதைமையன்றோ. அங்ங்னம் அறியினும் அது ஒருபகுதியல்லவா? “திருவாசகப் பெருமையை அறிந்தார் யார்? கவிச்சிங்கமாகிய சிவப்பிரகாச அடிகள் அறிந்தார்: அன்பு வடிவாகிய இராமலிங்க அடிகள் அறிந்தார்; மேல் நாட்டறிஞராகிய "ஜி.யூ.போப்' என்பார் அறிந்தார்; பிற அறிஞர் பலர் அறிந்தனர்; அறிகின்றனர்; அறிவார். சிவப்பிரகசனார் அறிந்து என்ன செய்தார்? நால்வர். நான்மணி மாலை என்னும் பொற்பேழையின்கண் மணி வாசகத்தின் மாண்பினையறியும் பத்து மணிகளைப் பெய்து வைத்தார். அவற்றுள் ஒன்று. 'விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரண னுரையெனு மாரண மொழியோ ஆதிசிர் பரவும் வாதவூ ரண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவி ராயின் வேத மோதின் விழிர்ே பெருக்கி - நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகா லோதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் 5ε

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/92&oldid=852836" இலிருந்து மீள்விக்கப்பட்டது