பக்கம்:மணிவாசகர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகு ரன்றி - மன்பதை யுலகின் மற்றைய ரிலரே” என்பது மற்றொன்று, 'வலமழு வுயரிய நலமலி கங்கை நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல் முகந்துல குவப்ப வுகந்த மாணிக்க வாசக னெனுமொரு மாமழை பொழிந்த திருவா சகமெனும் பெரு ரொழுகி ஒதுவார் மனமெனு மொண்குளம் புகுந்து காவெனு மதகி னடந்து கேட்போர் செவியெனும் கிலம்புக ஆன்றிய வன்பாம் வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி வளர்ந்து கருணை மலர்ந்து விளங்குறு முத்தி மெய்ப்பயன் றருமே: என்பது . இன்னும் அவர், 'கலமலி வாதவூர் கவ்லிசைப் புலவ! மனநின்றுருக்கு மதுர வாசக! எனவும், 'வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப!” செய்யவார் சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூர் அன்பl' எனவும் விளிக்கின்றார். மற்றையவைகளை அந்நூலுட், காண்க. இனி, இராமலிங்க அடிகள் தாம் பாடிய திருவருட்பா வில் பலவிடங்களுள் அடிகளைப் புகழ்ந்திருப்பதுடன், அந் நூலுள் 'ஆளுடைய அடிகள் அருண்மாலை' எனத் தனியே ஒரு பகுதி பத்துப்பாட்டு பாடியருளினர். அவற்றுள் சில, 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/93&oldid=852837" இலிருந்து மீள்விக்கப்பட்டது