பக்கம்:மணிவாசகர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனைக் கேட்கவில்லை என்றுங் கோடல் வேண்டுமே யொழியத் திருவாசகத்திற்கு அவ்வாற்றலில்லையென்று கோடல் இழுக்கென்க. விலங்குகள் கேளாதிருக்குமோ வெனின் நண்பர் இருவர் எதிரெதிரிருந்து செய்திகள் பேசுங்கால் ஒருவர் மற்றவரை நோக்கி நுமது நினைவு எங்கோ இருக்கிறாற் போலும்; யான் இதுபோது என்ன சொன்னேன்; சொல் லுங்கள்? என்றாராயினர், மற்றவர், ஆம் ஆம்': யான், எங்கேயோ இருந்து விட்டேன்: இன்னொருமுறை சொல் லுங்கள் எனக் கூறுவதைக் காண்கின்றோமாகலின் விலங்கு கள் கேளாதிருத்தல் இயல்பென்க. இங்ங்னமே திருவாசகத், தைப் பாடினால் இனிக்குமோ எனக் கருதுவார் அச்செய் யுளிலுள்ள நான்கலந்து பாடுங்கால்’ என்னுந் தொடரைக் கூர்ந்து நோக்கித் தமக்குச் சுவை தோன்றாவிடின் தாம் "அதிற்கலந்து பாடவில்லை' எனக் கருதுக. i இனி, சிவப்பிரகாசரும் தாம் அருளிய விளங்கிழை பகிர்ந்த' என்னும் பாவில் கேட்போரனைவரையும் அன்ப ராக்கி விடுமோ அவ்வாசகம்? என ஐயவினா எழுப்பு வார்க்கு அன்பராகாதவர் மக்கள் வகுப்பைச் சார்ந்தவரல், லர் என்னும் பொருள்தோன்ற மன்பதையுலகின் மற்றைய ரிலரே என்னும் விடையிறுத்தது.ாஉமென்க. இனி, மேல்நாட்டறிஞராகிய போப் என்பார் திரு' வாசகப் பெருமையை எங்ங்ணம் அறிந்து வைத்தாரென்பதை நோக்கின், தமிழ் மக்கள் என்று தம்மை நினைத்துக் கொண்டு அவிழ்ச்சுவையே யன்றித் தமிழ்ச்சுவையறியர்து: வறிதே காலம் போக்குந் தம்பங்கள் வெட்கித் தலைகுனிய: வேண்டாமோ? அப்புலவர் பெருமகன் என்ன சொன்னார்: தம் உயிர் உடலினின்றும் பிரியுஞான்று தம் அருகிலிருந்த நண்பர் பலரையும் நோக்கி நண்பர்காள் யான் இறந்தபின் நீவிர் எனக்குப் பெரியதொரு கல்லறை கட்டவேண்டுமென்ப, தில்லை; சிறிதாகக் கட்டினாற் போதும்; ஆனால், அது. 2む。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/95&oldid=852839" இலிருந்து மீள்விக்கப்பட்டது