பக்கம்:மணிவாசகர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டும் பொருள் மாணிக்கவாசகர் பிறந்த நாட்டுப் பொருளா யிருக்க வேண்டும்; ஆகவின் அந்நாட்டுக்கு என் கருத்தைத் தெரிவித்து அங்கிருந்து எவ்வளவு குறைவாகப் பொருள் வரி னும் அப்பொருளளவில் சிறிதாகக் கட்டி அதில் 'தண்ட மிழ்த் தொண்டன்' என்னும் பெயர் பொறித்து விடுங்கள்: இதுவே என் வேண்டுகோள்’ எனக் கூறித் தம் பூதவுடம்பை நீத்தனர். அவரது வேண்டுகோளைக் குறித்த அறிக்கை நமது நாட்டுக் கல்லூரிகளுக்கு வந்த ஞான்று பொருளளித்த மாணவர் பலருள் காலஞ்சென்ற தி ரு வா ள ர், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் (நவசக்தி ஆசிரியர்) ஒருவராவர் (அவர் சொல்லித்தான் இதனை, யானறிந்தேன்) அன்பர்களே! இந்நிகழ்ச்சி ஒன்றை உன்னி யுன்னி நோக்குவீராயின், அவ்வறிஞர் பெருமானை நமது அழுதடியடைந்த அன்பர் அருளிய திருவாசகம் எத்துணைத் தன்வயப்படுத்தியிருந்தது என்பது தெற்றெனப் புலனாகும். அவரை ஆட்கொண்டது திருவாசகத்திலுள்ள "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்னும் ஒரடியேதான். ஆகவே, மேற்காட்டியவற்றால் நமது அடிகள் ஒரு அன் ப்ர், என்பது நன்றாகப் புலனாகும்; ஆனால், அழுதல் ஒரு சாதனமா? அடி அடைந்தாரா? என்னும் இரண்டு பகுதி களையும் திருவாசகத்திலுள்ள ஆதரவுகளைக் கொண்டே "ஆம்" என்று, நிறுவினேம். என்னை? திருவாசகப பயிற்சி மிகுதியால் பரஞ்சோதி முனிவரென்பார் திருவிளையாடலில் அடிகளை அழுதடி யடைந்த அன்பர்’ எனக் கூறினாரென முன் குறித்தலாலென்க. அங்ங்ணமே இந்த அன்பர்' என்ற பகுதியை நிறுவுதற்கும் மேற்காட்டிய புறச்சான்றுகள் போதா. அகச்சான்றுகள் வேண்டும்; எனின் அகச்சான்றுகள் எங்ங்ணம் கிடைக்கும்?ஒருவர் தம்மை ஓர் அன்பரென்றாதல், பெரியாரென்றாதல் கூறுவாரோ? அன்றிக் கருதுதல் தானும் செய்வாரோ? அங்ஙனம் கருதின் அவர் உண்மை யான அன்பருமா கார்: பெரியாருமாகார். அன்றியும் ஏகதேச 96.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/96&oldid=852840" இலிருந்து மீள்விக்கப்பட்டது