பக்கம்:மணிவாசகர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாய அவரிடம் அன்பும் பெருமையும் இருப்பின் அவை பறந் தோடிப்போகும். பெரியோரின் இலக்கணங்கள் பலவற்றுள் ளும் தலைசிறந்ததுதான். எவ்வித நலனுமுடையவனல்லன்” என்றும், எல்லா வுயிரினும் கடைப்பட்டவன்" என்றும் கருதுவதன்றோ? இக்கருத்து இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னுங் கால மூன்றினும் முறையே இருந்த, இருக்கின்ற, இருக்கும் பெரியோரனைவருக்கும் ஒத்ததாகும். உலகத்தின்கண் பெரும்பாலோராற் போற்றப்பட்டு வரும் பெரியோராகிய காந்தியடிகள் தாங்கள் மெய்யாகவே மகாத்மாவா? அப்படியானால் மகாத்மா என்னுஞ் சொல்லை "விளக்குக' என நண்பர் சிலர் கேட்ட வினாக்களுக்கு விடை யாகக் கூறியதாவது : "அத்தகைய ஒருவனாயிருக்கச் சிந்திப்பதில்லை: ஆனால், கடவுள் படைப்புக்கு உட்பட்ட உயிர்களுள் மிகத் தாழ்ந்தவன் யான் என்பது எனக்குத் தெரியும். அச்சேர்க்கை பெறாத யான் அச்சொல்லை விளக்கவல்லேன ல்லேன்' என்பது. - - இன்னும் அப்பெரியார் சத்திய சோதனை'யின் முன் னுரையில் அருளிய பொன் மொழிகளுட் சில:- 'சத்தியப் பயிற்சியில் அருமை எளிமை என்னும் இரண்டும் உண்டு; அப்பயிற்சிச் செருக்கில் ஆழ்ந்து கிடக்கும் ஒருவற்கு அரியது ஒன்றுமறியா இளங்குழந்தைக்கு அஃது எளிது. சத்திய நெறி யிற் புகுவோன் துளசியினுந் தாழ்மை பெறவேண்டும். உல கோர் தூசியைத் தம்மடிக் கீழ் மிதிக்கின்றார்; சத்தியத்தை நாடுவோன் அத்துTசியால் மிதியுண்ண் வேண்டும். அதன் பின்னர்-முன்னரன்று-அவன் உண்மை ஒளி சிறிது காணக் கூடும். என்னை யானே அளந்து ஆராயும்போது சுர்தாஸ் என்னும் அன்பர் பாடியவாறு என்னைப் போன்ற கொடும் பாவி; வெறுக்கத் தக்கவன் யார்? என்னைப் படைத்த ஆண் 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/97&oldid=852841" இலிருந்து மீள்விக்கப்பட்டது