பக்கம்:மணிவாசகர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீசனேன்" பாவி யேனைப் பணி கொண்டாய்' "நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே' என்பன. "நாயிற் கடையா(ம்) நாயேன்” போன்ற பல தொடர் கள் முன்னே குறிக்கப்பட்டன. இன்னும் திருவாசகத்தை வடித்து வடித்துப் பார்ப்பினும் பெரும்பகுதி அடிகள் தமது தாழ்மையைப் பற்றியும் இறைவன் மேன்மையைப் பற்றியும் கூறியனவாகவே காணப்படும். இத்தாழ்வுதான் சைவத்தின் உயிர்நாடி என்பதை, "வாழ்வெணு மையல்விட்டு வறுமையாஞ் சிறுமைதப்பித் தாழ்வெனுங் தன்மையோடு சைவமாஞ் சமயஞ்சாரும் ஊழ்பெறலரிது’ என்னும் சித்தியாராலறிக. "வாழ்வெணு மையல் விட்டு. வறுமையாஞ் சிறுமை தப்பி"யதை "செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும்' என்பதனாலும், தாழ்வு' என்பதற்கு எல்லா உயிரினுந் தம்மை ஓர் கடையவனாகக் கருதல் (முனைப்பின்றி இருத். தல்) என்னும் பொருளை மேற்காட்டிய தொடர்களாலும் ‘யாம் எல்லாம் வல்ல கடவுளுக்கு அடிமை;பிறருக்கு அடிமை யன்று; ஆதலின் எதற்கும் அஞ்சோம்' என்னும் பொருளை "யாவர்கோ னென்னையும் வந்தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோம்' என்பதானா லும் விளக்கியருளினமை காண்க. இதனோடு, "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்னும் திருநாவுக்கரசரின் செம்மொழியையும், 'உலகத்தில் எவர்க்கும் அஞ்சேன்: கடவுள் ஒருவருக்கே அஞ்சுவேன்' 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/99&oldid=852843" இலிருந்து மீள்விக்கப்பட்டது